அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: டொனால்டு டிரம்ப்- 198; கமலா ஹாரிஸ் 109
- இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வலை வாக்குப்பதிவு நடைபெற்றது.
- ஸ்விங் மாகாணங்களான ஏழு மாகாணங்கள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி காலை 8.45 நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 198 எலக்டோரல் வாக்குகளும், கமலா ஹாரிஸ் 109 எலக்டோரல் வாக்குகளும் பெற்றுள்ளனர்.
கொலராடோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இங்கு 10 எலக்ட்டோரல் வாக்குகள் உள்ளன.
யூட்டா மாகாணத்திலும் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இங்கு 6 எலக்ட்டோரல் வாக்குகள் உள்ளன.
மொன்டானா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி. இங்கு 4 எலக்ட்டோரல் வாக்குகள் உள்ளன. டிரம்ப் 28 சதவீதம் வாக்குகளும், கமலா ஹாரிஸ் 26.4 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
காலை 8.15 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 34,910,907 votes (52.2%) வாக்குகள் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 31,127,798 votes (46.6%) வாக்குகள் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் வெள்ளை மாளிகை முன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஓஹியோ மாகாணத்தில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இங்கு 17 எலக்ட்டோரல் வாக்குகள் உள்ளன.
40 எலக்ட்ரோரல் வாக்குகளை கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிரம்ப் 41,33,755 (54.4 சதவீதம்), 33, 80,534 (44.5 சதவீதம்) வாக்குகளும் பெற்றனர். காலை 8 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 179 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 99 வாக்குகள் பெற்று பின்தங்கி வருகிறார்.
இந்திய நேரப்படி இன்று காலை 7.50 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 177 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 99 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஸ்விங் மாகாணமான வடக்கு கரோலினாவில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். இங்கு 16 எலக்ட்டோரல் காலேஜ் (Electoral College) வாக்குகள் உள்ளன.