உலகம்
உக்ரைன் சண்டையை முடிவுக்கு கொண்டுவர உதவும் எந்த நாட்டின் பங்கையும் அமெரிக்கா வரவேற்கும்- வெள்ளை மாளிகை

உக்ரைன் சண்டையை முடிவுக்கு கொண்டுவர உதவும் எந்த நாட்டின் பங்கையும் அமெரிக்கா வரவேற்கும்- வெள்ளை மாளிகை

Published On 2024-09-05 08:15 IST   |   Update On 2024-09-05 08:15:00 IST
  • ரஷியா சென்ற நிலையில் பிரதமர் மோடி உக்ரைன் சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
  • உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பு.

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்து வருகின்றன. அமெரிக்காவும் உதவி வருகிறது. இதனால் ரஷியாவிடம் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த நாடுகளால் பேச முடியவில்லை.

சீனா ரஷியாவுடன் இணக்கமாக உள்ளது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை என வரும்போது விலகி நிற்கிறது. இந்தியா உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் நட்பு நாடாக விளங்குகிறது. சமீபத்தில் ரஷியாவிற்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைனுக்கும் சென்றார்.

இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடி ரஷியா, உக்ரைன், போலந்து சுற்றுப் பயணத்தை முடிக்கு கொண்டு இந்தியா திரும்பிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியிடம் டெலிபோனில் பேசினார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கெர்பியிடம், இந்தியாவால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என ஜோ பைடன் நினைத்து போன் செய்தாரா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஜான் கெர்பி "ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சிறப்புரிமைகள், உக்ரைன் மக்களின் சிறப்புரிமைகள், நியாயமான அமைதிக்கான அவரது (ஜெலன்ஸ்கி) திட்டத்திற்கு இணங்க, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவுவதற்கு எந்த நாடும் தயாராக இருந்தால், அத்தகைய பங்கை நாங்கள் நிச்சயமாக வரவேற்போம். இந்திய முக்கிய பங்கு வகிக்கும் என நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.

Tags:    

Similar News