செய்திகள்

ஆடி முதல் வெள்ளிக்கிழமை தொட்டியம் மதுரைகாளியம்மனுக்கு 3 ஆயிரம் டஜன் வளையல் அலங்காரம்

Published On 2016-07-23 13:44 IST   |   Update On 2016-07-23 13:44:00 IST
ஆடி முதல்வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தொட்டியம் மதுரை காளியம்மனுக்கு 3 ஆயிரம் வளையல் அலங்காரம் நடைபெற்றது.திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிவில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை காவிரியாற்றிக்கு சென்று புனித நீர் கொண்டு வரப்பட்டு மதுரைகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 3 ஆயிரம் டஜன் வளையல் கொண்டு மதுரை காளியம்மன் மற்றும் உற்சவ
திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிவில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை காவிரியாற்றிக்கு சென்று புனித நீர் கொண்டு வரப்பட்டு மதுரைகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் 3 ஆயிரம் டஜன் வளையல் கொண்டு மதுரை காளியம்மன் மற்றும் உற்சவ அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் தொட்டியம் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் பூசாரிகள் செய்திருந்தனர்.

Similar News