செய்திகள்

மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

Published On 2016-07-23 15:03 IST   |   Update On 2016-07-23 15:03:00 IST
மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம், அபிஷேகம் செய்து, சந்தனகாப்பிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மயிலாடுதுறை வண்டிகார தெருவில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோவிலுக்கு சமையல் கலைஞர்கள் சார்பில் பால்குடம், அபிஷேகம் செய்து, சந்தனகாப்பிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

விழாவில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புகளின் தலைவர் பண்ணை. டி.சொக்கலிங்கம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அலகு குத்தி முளைப்பாரி எடுத்து சென்றனர். இவ்விழா கடந்த 35 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. காலை கூறைநாடு கலியபெருமாள் இன்னிசையோடு பால்குடம் புறப்பட்டது. அதன்பின்பு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் பக்தர்களுக்கு மகாதானதெருவில் உள்ள திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மங்கள பொருட்கள் வழங்குதல் பின்னர் சமையல்கலைஞர் சங்க தலைவர் முருகன் வயலின் இன்னிசை, மாஸ்டர் கிரிதர் மிருதங்கம், கண்ணன் மயிலாடுதுறை எம்.ஏ.பங்கஜ். மங்களவாத்தியம் ஆகியவை நடைபெற்றது.

இவ்விழா ஏற்பாடுகளை சேந்தகுடி கமலநாதன் சேகர், கேரளா முரளி, முருகன், சிங்கராம்பிள்ளை. ஸ்ரீதர். வெங்கடேசன், முரளி. ராஜீ. மணி, திண்ணை ரவி, துர்க்கேஸ்வரன், நாகலிங்கம், வைத்தா, வி.ரவி, வி.பாலா, கே.ராஜேஷ்பாபு, சேகர்டைலர் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News