செய்திகள்
லாலாப்பேட்டை மார்கண்டேயர் கோவிலில் நவராத்திரி விழா
லாலாப்பேட்டை கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மார்கண்டேயர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.
லாலாப்பேட்டை கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மார்கண்டேயர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.
ஸ்ரீ பாவ நாராயணன், பத்ராவதி சிலைக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், திருமஞ்சனம் உட்பட 16வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாவ நாராயணன், பத்ராவதி சுவாமிக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை சுற்றுபுற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.
நவராத்திரியின் தொடக்க நாளில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வண்ணகொழு பொம்மைகள் முக்கோடி தேவர்கள் அமைக்கப்பட்டுள்ள காட்சியை பக்தர்கள் கண்டு கழித்துச் சென்றனர். கோவில் பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் தனபால் சுவாமி கள் செய்திருந்தார்.