புதுச்சேரி

விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடந்த கலை-அறிவியல் கண்காட்சியை செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்த காட்சி.

கலை-அறிவியல் கண்காட்சி-செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார்

Published On 2022-11-09 09:17 GMT   |   Update On 2022-11-09 09:17 GMT
  • புதுவை லாஸ்பேட்டை யில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 2022-23-ம் ஆண்டுக்கான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
  • இக்கண்காட்சியினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண் வியந்து மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை யில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 2022-23-ம் ஆண்டுக்கான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியினை பள்ளியின் தாளாளரும், எம்.பி.யுமான செல்வகணபதி தொடங்கி வைத்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா குத்துவிளக்கேற்றி வைத்தார். இணை முதல்வர் கீதா சிறப்புரையாற்றினார்.

பள்ளி முதல்வர் மீனாட்சி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் சுற்று சூழல் பாதுகாப்பு அரங்கம், எதிர்கால இந்தியா அரங்கம், விண்வெளியில் புரட்சி அரங்கம், மாயாஜாலம் நிறைந்த விளையாட்டு அரங்கம், கணிதம் மற்றும் இலக்கிய அரங்கம், கண்ணை கவரும் ஓவிய அரங்கம் என பல அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

இக்கண்காட்சியினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண் வியந்து மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News