புதைவிட கேபிள் அமைக்கும் பணியை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதைவிட கேபிள் அமைக்கும் பணி-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- அந்த பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமாரை சந்தித்து முறையிட்டனர்.
- கேபிள் பிரிவு இளநிலை பொறியாளர் லோகநாயகி, பிகோத்தே உள்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வீதியில் அமைந்துள்ள சப்தகிரி கார்டன் பகுதிக்கு பல வருடங்களாக புதைவட கேபிள் இல்லாமல் இருந்தது.
இதனால் மின்சார சப்ளையில் அவ்வப்போது பாதிப்பு இருந்து வந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமாரை சந்தித்து முறையிட்டனர்.
இதையடுத்து இப்பகுதியில் புதைவட கேபிள் அமைப்பதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணியும் வீட்டு இணைப்புக்கான கேபிள் அமைக்கும் பணியும் மேற்கொள்வ தற்கான பூமி பூஜையை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், புதைவட கேபிள் பிரிவு செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் திலகராஜ், கேபிள் பிரிவு உதவி பொறியாளர் முருகசாமி, இளநிலை பொறியாளர் குமார், கேபிள் பிரிவு இளநிலை பொறியாளர் லோகநாயகி, பிகோத்தே உள்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.