புதுச்சேரி

சிமெண்டு தரைத்தளம் அமைக்கும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.

சிமெண்டு தரைத்தளம் அமைக்கும் பணி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

Published On 2023-03-27 10:17 IST   |   Update On 2023-03-27 10:17:00 IST
  • காரைக்கால் அரசலாற்றில் உள்ள மீன்பிடி விசைப்படகு செல்லும் வழித்தடத்தில் பாறைகளை அகற்றுதல் மற்றும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் சிமெண்ட் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது.
  • ரூ.33 லட்சம் மீன்வளத்துறையின் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

காரைக்கால் அர சலாற்றில் உள்ள மீன்பிடி விசைப்படகு செல்லும் வழித்தடத்தில் பாறைகளை அகற்றுதல் மற்றும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் சிமெண்ட் கான்கிரீட் தரைத்தளம் அமைத்தல் ஆகிய 2 பணிகளுக்கான நிதியானது மீன்வளத்துறையின் மாநில நிதியிலிருந்து செயல்படுத்தப்படவுள்ள மேற்கண்ட பணிகளுக்கான பூமி பூஜை பொதுப் பணி துறை நீர் பாசனம் மற்றும் பொது சுகாதார பிரிவு மூலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.

அதே சமயம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், திருமுருகன், நிரவி, தியாகராஜன், துணை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், முதன்மை பொறியாளர் சத்திய மூர்த்தி, மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வ சிகாமணி, கண்கா ணிப்பு பொறியாளர் ராஜசேகர், செயற்பொறியாளர் வீரசெல்வம், துணை இயக்கு னர்கள் சவுந்தரபாண்டியன், ஷாஜீமா மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அரசலாற்றில் உள்ள மீன்விசைப்படகு செல்லும் வழித்தடத்திலுள்ள பாறைகளை அகற்றுத லுக்கான திட்ட மதிப்பு கான்கிரீட் தரைத்தளம் அமைத்தலுக்கான திட்ட மதிப்பு ரூ.33 லட்சம் மீன்வளத்துறையின் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News