புதுச்சேரி

பாதாள வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

பாதாள வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி - கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-11-08 15:00 IST   |   Update On 2022-11-08 15:00:00 IST
  • பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்கும் படி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
  • பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட திப்புராயப்பேட்டையில் பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்கும் படி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை அதிகாரிகளை அணுகி, விடுபட்ட லேசர் கோவில் வீதியில் பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

அதன்படி அப்பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பாதாள வடிகால் வாய்க்கால் அமைப்பத ற்கான தொடக்கவிழா நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் சங்கர், தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல் இளைஞர் அணி ராஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News