பெரியார் சிலைக்கு தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் பெரியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், கே.எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளரும் எதிர்கட்சித்தலைவருமான சிவா தலைமையில் தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வன்முறை ஒழிப்பு எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாநில அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், அருட்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் காமராஜர் சாலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், ஆர்.வி. திருநாவுக்கரசு மாநில பொருளாளர் ரவி பாண்டு ரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி, நாகமணி, காந்தி, மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி,மாநில இலக்கியணி பொருளாளர் குணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். புதுவை மாநில அ.ம.மு.க. சார்பில் தெற்கு மாநில செயலாளர் யூ.சி.ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், வடக்கு மாநில இணை செயலாளர் லாவண்யா, கட்சியின் மூத்த நிர்வாகி ரகுபதி, மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் புஷ்பா, மூர்த்தி, தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், பரிதிமால் கலைஞன், வேதபிரகாஷ், முருகன், செல்ல என்ற தமிழ்செல்வன், செந்தில் என்ற குமரவேலு, ஜான் மற்றும் உழவர்கரை தொகுதியை சேர்ந்த லூர்து, கில்பர்ட், மோகன்குமார், பிரவீன், சக்திவேல், சண்முகம், பிரதாப், கணேஷ், வினோத், அமலா, சரளா, உமா, சந்திரா, அமலர்சந்திரா, விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சலீம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேவபொழிலன், புதிய நீதி கட்சி சார்பில் பொன்னுரங்கம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுபோல் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் மற்றும் திராவிட அமைப்புளை சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.