புதுச்சேரி
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.
கொரோனா காலகட்டத்தில் இருந்து பணியாற்றும் செவிலியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
- கவர்னரிடம் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. மனு
- இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனோ பெருந்தொற்று காலத்தில் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டு தற்பொழுது வரை பணிபுரிந்து வரும் மருத்துவ செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும்.
தற்பொழுது புதுச்சேரி அரசில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த இடத்தில் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் இதுகுறித்து உயிர் மட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஆவன செய்வதாக உறுதியளித்தார்.