கோப்பு படம்.
ஏனாம் எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம்-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.
- முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- வாக்களித்த மக்களுக்கு எப்படி எல்லாம் நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்ற சிந்தித்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏனாம் சட்டமன்ற உறுப்பினரிடம் பெரும் எதிர் பார்ப்பை பார்த்து தான் அந்த தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை
எப்படி எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும், அதற்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விடுத்து அரசியல் முதிர்ச்சி பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசுவது கண்டனத்துக்குரியது.
தற்போது தான் பேசியதை தவறாக புரிந்து செய்தி வெளியிட்டுள்ளதாக கூறும் ஏனாம் எம். எல்.ஏ. சிந்தித்து செயல்பட வேண்டும். வாக்களித்த மக்களுக்கு எப்படி எல்லாம் நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்ற சிந்தித்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.
சுயேச்சை எம்.எல்.ஏ.வாக தேர்வானாலும் தற்போது ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்களிடம் தனது ெதாகுதிக்கு வேண்டிய திட்டங்களை நிறை வேற்றிக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். அதை தவிர்த்து முதல்- அமைச்சர் பற்றி தரக்குறைவாக பேசுவது தவறானதாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.