புதுச்சேரி

விவசாயிகளுக்கு இலவச காய்கறி விதைகள் வழங்கிய காட்சி.

விவசாயிகளுக்கு இலவச காய்கறி விதைகள்

Published On 2023-08-01 14:24 IST   |   Update On 2023-08-01 14:24:00 IST
  • இலவச காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • செயல் விளக்க உதவியாளர்கள் கோபாலகிருஷ்ணன், தொழில் நுட்ப மேலாளர் சிரஞ்சீவி ஆகியோர் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி வேளாண் துறை தேசிய தோட்டக்கலை சார்பில் மதகடிப்பட்டு உழவர் உதவியகம் சார்பில் இலவச காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை வேளாண் இயக்குனர் சண்முகவேல், மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன், பண்ணை மேலாளர் வினோத் கண்ணன், தோட்டக்கலை வேளாண் அலுவலர் பிரியதர்ஷினி , பூச்சியியல் நிபுணர் விஜயகுமார், ஆகியோர் கலந்து கண்டு விவசாயிகளுக்கு முன் பருவ பயிற்சி குறித்தும் காய்கறி விதைகள் குறித்து பயன்பாடுகள் குறித்தும் விளக்கிக் கூறினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, செயல் விளக்க உதவியாளர்கள் கோபாலகிருஷ்ணன், தொழில் நுட்ப மேலாளர் சிரஞ்சீவி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News