புதுச்சேரி
பாலின வன்கொடுமை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்ற காட்சி.
பாலின வன்கொடுமை விழிப்புணர்வு கருத்தரங்கு
- குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
- விழிப்புணர்வு போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழக சமுதாய கல்லூரியின் மேலாண்மை துறை சார்பில் மாணவர்களுக்கு பாலின வன்கொடுமைகள், குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி முதல்வர் லலிதாராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். துறைத்தலைவர் பாரதி வரவேற்றார். வரதட்சணை தடை வாரியத்தின் தலைவி வித்யாராம்குமார் சிறப்புரையாற்றினார்.
விழிப்புணர்வு போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் துணை பேராசிரியர்கள் அர்சுனன், சத்தியமூர்த்தி, வெங்கடாசலபதி, மாண வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.