புதுச்சேரி

பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் லட்சுமி நாராயணன் பார்வையிட்ட காட்சி.

தொடர் மழையால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதம்

Published On 2023-11-15 09:08 GMT   |   Update On 2023-11-15 09:08 GMT
  • அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு
  • வாய்க்கால்கள் தூர்வா ரப்படாததால் தண்ணீர் தேங்கி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் கடந்த 2 தினங்களாக மிக கனமழை பெய்தது.

 இதனால் தாழ்வான பகுதி உள்ள நிலங்களிலும் சாலைகளிலும் வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படு கிறது. தொடர்ந்து இன்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்த மழையின் காரண மாக ஏரி குளங்கள் பெரும்பாலானவை வேகமாக நிரம்பி வழிகிறது.

தாழ்வான பகுதி உள்ள விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. நிலத்தில் புகுந்த தண்ணீர் வடிய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் பயிர்கள் சேதம டைந்துள்ளது. முறையாக வாய்க்கால்கள் தூர்வா ரப்படாததால் தண்ணீர் தேங்கி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.

குறிப்பாக பாகூர் விவ சாய நிலத்திற்கு குறுக்கில் விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை உயரமாகவும் பாலங்களும் கட்டப்பட்டுள்ளதால் தற்பொழுது பெய்த மழை நீர் வடிய போதிய வசதி இல்லாமல் தேங்கி காணப்படுகிறது. பல இடங்களில் வாய்க்கால்கள் உடைந்து விளைநிலங்களில் தேங்கி தொடர்ந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராய ணன் தலைமை பொறியாளர் வீரசெல்வம் மற்றும் பொறி யாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வு செய்ய இன்று காலை பாகூர் வந்தனர்.

பாகூர் - கன்னியகோயில் ரோட்டின் ஓரத்தில் இருந்த சித்தேரி வாய்க்கால் உடைந்து நெல் வயலில் தண்ணீர் புதுந்து இருப்பதை பார்த்தார்.

இது சம்பந்தமாக புறவழிச் சாலை அமைக்கும் அதிகாரியிடம் பாகூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு ஏற்றவாறு பாலங்களும் வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அந்த அதிகாரியிடம் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News