புதுச்சேரி

ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்-ஏ.ஐ.டி.யூ.சி. தீர்மானம்

Published On 2023-02-11 10:22 IST   |   Update On 2023-02-11 10:22:00 IST
  • அரசு சார்பு நிறுவனங்களில் ஆண்டு கணக்கில் சம்பளம் வழங்கப்படாததால் இன்னலுக்கு ஆளாகியுள்ள அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
  • ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினார்.

புதுச்சேரி:

ஏ.ஐ.டி.யூ.சி. மாநில நிர்வாகிகள் கூட்டம் முதலியார் பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் நடந்தது.

ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினார்.

கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி, துணைத் தலைவர்கள் சேகர், மறிகி ரிஸ்டோபர், மன்னாதன், செயலாளர்கள் தயாளன், முத்துராமன், துரை செல்வம், மூர்த்தி, ஹேமலதா, செந்தில்முருகன், பாஸ்கர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அரசு சார்பு நிறுவனங்களில் ஆண்டு கணக்கில் சம்பளம் வழங்கப்படாததால் இன்னலுக்கு ஆளாகியுள்ள அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.

மூடி கிடக்கும் பஞ்சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு உறுப்பினர்களை தேர்வு செய்து தேவையான நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் மின்துறையை தனியார் மயமாக்கும் படுத்தும் முடிவினை கைவிட வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டம் நடத்துவது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News