புதுச்சேரி

அதிகாரிகளுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆலோசனை நடத்திய காட்சி.

மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்

Published On 2023-07-03 15:12 IST   |   Update On 2023-07-03 15:12:00 IST
  • அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவு
  • குப்பைகள் தேங்காமல் இருக்க அவற்றை உடனடி யாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரி:

புதுவையில் பெய்து வரும் தொடர் மழையால் மணவெளி தொகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர்கள் சரஸ்வதி, அகிலன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மணவெளி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் குப்பைகள் தேங்காமல் இருக்க அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News