புதுச்சேரி
மணவெளி அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- மாணவ -மாணவியர்கள் காய்- கனிகள் வேடமணிந்தும் சிலம்பம் ஆடியும் வரவேற்றனர்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதிக்குட்பட்ட மணவெளி மந்தை பகுதி அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த அறிவியல் கண்காட்சியின் போது 1-ம் வகுப்பு முதல் 5ம்- வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ -மாணவியர்கள் காய்- கனிகள் வேடமணிந்தும் சிலம்பம் ஆடியும் வரவேற்றனர்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைவர் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று மாணவ -மாணவியர்கள் காட்சிக்கு வைத்திருந்தவற்றை பார்வையிட்டு அது குறித்து மாணவர்கள் கூறிய விளக்கங்களை கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் கல்வித் துறையின் முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் பள்ளிகளின் வட்ட ஆய்வாளர் லிங்கசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை சாந்தா வரவேற்றார்.