புதுச்சேரி

ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உடனிருந்து சிகிச்சைக்கு உதவிய செல்வகணபதி எம்.பி.

தொழிலாளர்களின் சிகிச்சைக்கு உதவிய செல்வகணபதி எம்.பி.

Published On 2023-11-05 13:41 IST   |   Update On 2023-11-05 13:41:00 IST
  • பா.ஜனதா மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் உடனடியாக ஜிப்மர் மருத்துவமனக்கு விரைந்து வந்தனர்.
  • அனைவரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

புதுச்சேரி:

காலாப்பட்டு தனியார் மருந்து மாத்திரை மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பாய்லர் வெடிவிபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

 இவர்களில் 11 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செல்வகணபதி எம்.பி. , காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், பா.ஜனதா மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் உடனடியாக ஜிப்மர் மருத்துவமனக்கு விரைந்து வந்தனர்.

அங்கு 15 படுக்கைகளை தயார் செய்து படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருந்தனர்.

மேலும் நள்ளிரவு வரை அங்கு இருந்த செல்வகணபதி எம்.பி. பல்வேறு பகுதியில் இருந்து 11 ஆம்புலன்ஸ்களை போன் செய்து வரவழைத்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ்கள் அங்கு வந்தன.

இதையடுத்து அனைவரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News