புதுச்சேரி

கின்னஸ் சாதனைக்காக காதில் முடிவளர்க்கும் புதுச்சேரி போலீஸ் அதிகாரி

Published On 2023-09-23 10:29 IST   |   Update On 2023-09-23 10:29:00 IST
  • மதுரையை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் காதில் 18.1 செ.மீ. முடி வளர்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
  • மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த வஷேஸ்வர் தயாள் தியாகி என்பவரும் காதில் நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.

புதுச்சேரி:

உலகில் பலரும் தங்களிடம் காணப்படும் தனி திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் காதில் 18.1 செ.மீ. முடி வளர்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த வஷேஸ்வர் தயாள் தியாகி என்பவரும் காதில் நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.

அதேபோல் புதுவை காவல்துறை பயிற்சி பள்ளியில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ரகுபதி காதில் நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனைக்கு தயாராகி வருகிறார். இயற்கையாகவே காதில் வளரும் முடியை இவர் அவ்வப்போது குறைத்து வந்துள்ளார்.

ஆனால் இதுபோன்ற சாதனை செய்திகளை கேட்ட பின்பு, தானும் அதே போல் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் கடந்த 2½ ஆண்டுகளாக காது முடிகளை வெட்டாமல் வளர்த்து வருகிறார்.

இப்போது 7 செ.மீ. வரை காதில் முடி வளர்த்துள்ளார். விரைவில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் சாதனை படைக்கும் அளவுக்கு முடி வளர்ப்பேன் என்று அவர் கூறினார். இன்ஸ்பெக்டர் ரகுபதி காதில் முடி வளர்ப்பதற்கு புதுவை காவல்துறையில் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News