புதுச்சேரி

கோப்பு படம்

அக்னி நட்சத்திரத்தையொட்டி சிவன் கோவிலில் தாராபிஷேகம்

Published On 2023-05-04 06:03 GMT   |   Update On 2023-05-04 06:03 GMT
  • தேன், சந்தனம், இளநீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது.
  • துளி, துளியாக விழும் படியானா தாரா பிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவையை அடுத்த பாகூரில் மூலநாதர் சாமி கோவிலில் அக்னி நட்சத்திர சிறப்பு அபிஷேகம் தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.

 10.30 மணிக்கு பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பி கையம்மன், முருகன், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து பகல் 11 மணிக்கு 108 லிட்டர் பன்னீர், பால், தயிர், தேன், சந்தனம், இளநீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. அக்னி நட்சத்திர நாட்கள் முழுவதும் சாமியை குளிர்விக்கும் வகையில் தாரா பாத்திரத்தில் நிரப்பப்பட்ட பன்னீர், ஏலக்காய் வாசனை திரவியங்கள், சிவலிங்கம் மீது துளி, துளியாக விழும் படியானா தாராபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாராபிஷேகத்துக்கு வாசனை திரவியங்களை பக்தர்கள் வழங்கலாம் என அர்ச்சகர்கள் தெரி வித்துள்ளனர். ஏற்பா டுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அர்ச்சகர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News