புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரனிடம் மனு அளித்த காட்சி.

சுற்றுலா படகு இயக்க அனுமதிக்க வேண்டும்

Published On 2023-05-29 10:49 IST   |   Update On 2023-05-29 10:49:00 IST
  • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
  • மீனவர்கள் ஆற்று பகுதியில் சுற்றுலா படகு இயக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவர்கள் கொரோனா காலகட்டத்துக்கு பின்னர் மீன் பிடி தொழிலில் வருமானம் குறைந்ததால் அப்பகுதி இளைஞர்கள் பாதுகாப்பு வசதியுடன் ஆற்று பகுதியில் சுற்றுலா படகுகளை இயக்கி வந்தனர்.

தற்போது இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வம்பாகீரப்பாளையம் இளைஞர்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரனை வரவழைத்து வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் ஆற்று பகுதியில் சுற்றுலா படகு இயக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

மேலும் ஓதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டரிடமும் கென்னடி எம்.எல்.ஏ. தொலைபேசியில் பேசி மீனவர்கள் சுற்றுலா படகு இயக்க ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News