புதுச்சேரி

செயற்குழு கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கே.ராஜன் பேசிய போது எடுத்தபடம்.

வானூர் தெற்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம்

Published On 2023-02-17 11:13 IST   |   Update On 2023-02-17 11:13:00 IST
  • கூட்டத்துக்கு வானூர் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
  • ஒன்றியத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்ய நிர்வாகிகள் உழைக்க வேண்டும்.

புதுச்சேரி:

கோட்டகுப்பத்தை அடுத்த பொம்மையார்பாளையத்தில் வானூர் தெற்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு வானூர் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கே.ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

வானூர் ஒன்றியத்துக்குட்பட்ட 43 பூத்துகளில் உடனடியாக கமிட்டி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்ய நிர்வாகிகள் உழைக்க வேண்டும்.

வானூர் தொகுதியில் பா.ஜனதா வளர்ந்து வரும் நிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து பா.ஜனதாவில் வந்து இணையும் உறுப்பினர்களுக்கு சரியான பதவி வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி தலைவர் குட்டியாண்டி, மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளவரசன், முருகன், ஒன்றிய செயலாளர் குப்புசாமி, ஒன்றிய துணைத் தலைவர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News