புதுச்சேரி
கோப்பு படம்.
- கோவில் விழாவுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்த போது பரிதாபம்.
- இது குறித்து சேதராப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் அருகே காட்ராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார். (வயது 32) இவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் சங்கரிடம் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.
சேதராப்பட்டு அருகே கரசூரில் முத்து மாரியம்மன் கோவில் விழாவுக்காக நேற்று சதீஷ் குமார் மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு சதீஷ்குமாரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள்அவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சேதராப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.