நோட் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது இன்பினிக்ஸ்
- நோட் 40 ப்ரோபிளஸ் 100W wired பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
- ஸ்டேன்டர்டு வெர்சன் செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் ஹெட்செட்களை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் நோட் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. நோட் 40, நோட் 40 5ஜி, நோட் 40 ப்ரோ, நோட் 40 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 40 பிரோ பிளஸ் 5ஜி ஆகிய புதிய டிசைன் கொண்ட செல்போன்களை வெளியிட்டுள்ளது.
இந்த போன்கள் பிஎம்டபிள்யூ குரூப் உடன் இணைந்து தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில்வர் பினிஷஸ், வெர்டிகிள் ரிட்ஜெஸ், ரெட் மற்றும் ப்ளூ கலருடன் வெளியாகி உள்ளது. இந்த செல்போன்கள் ஸ்டேன்டர்டு வெர்சன் செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் ஹெட்செட்களை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 40 சுமார் 17,400 ரூபாய் அளவில் விற்பனையாகிறது. நோட் 40 5ஜி 21,600 ரூபாய்க்கும், நோட் 40 ப்ரோ (4ஜி) 23,300 ரூபாய்க்கும், நோட் 40 ப்ரோ (5ஜி) 25,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் உலகளவில் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் அனைத்து ஹெட்போன்களையும் இந்த புதிய டிசைன் செல்போன்களில் பயன்படுத்தலாம்.
நோட் 40 சீரிஸ் போன்கள் இந்த வருடம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட போன்களில் இருந்து எந்த மாற்றமும் பெறவில்லை. அவற்றின் டிசைன் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இது, விங் ஆஃப் ஸ்பீடு டிசைன் உடன் சில்வர் கலரை கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 40, நோட் 40 ப்ரோ MediaTek Helio G99 SoCs-ஐ கொண்டுள்ளது. நோட் 40 மற்றும் நோட் ப்ரோ போன்கள் 5,000mAh பேட்டரிகளை கொண்டுள்ளது. ப்ரோ பிளஸ் 4,600mAh பேட்டரியை கொண்டுள்ளது. நோட் 40 ப்ரோபிளஸ் 100W wired பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.