மொபைல்ஸ்

ஐபோனுக்கு ரூ. 8 ஆயிரம் வரை தள்ளுபடி - அமேசான் அதிரடி

Published On 2024-02-16 09:15 GMT   |   Update On 2024-02-16 09:15 GMT
  • எக்சேன்ஜ் சலுகையின் மூலம் இதன் விலையை மேலும் குறைக்கலாம்.
  • எப்போது வரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

அமேசான் வலைதளத்தில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி எப்போது வரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஐபோன் 13 மாடலின் பேஸ் வேரியன்டில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 50 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும்.

முன்னதாக ஐபோன் 13 மாடலின் 128 ஜி.பி. மாடல் ரூ. 59 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 51 ஆயிரத்து 790 என மாறி இருக்கிறது. இதன் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 61 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது.

விலை குறைப்பு மட்டுமின்றி ஒன்கார்டு கிரெடிட் கார்டு மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1750 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் மூலம் இதன் விலையை மேலும் குறைக்க முடியும்.

அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ட்ரூ டோன், செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி, ஐ.ஒ.எஸ். 17 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5, என்.எஃப்.சி. மற்றும் ஜி.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News