null
6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான ஸ்மார்ட்போன்
- ஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
- இதில் உள்ள மெமரி ஃபியுஷன் தொழில்நுட்பம் ரேம்-ஐ 7 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள செய்கிறது.
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஐடெல் P40 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐடெல் P40 மாடலில் 6.6 இன்ச் HD டிஸ்ப்ளே, ஆக்டாகோர் SC9863A பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, QVGA சென்சார், டூயல் ஃபிளாஷ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஐடெல் P40 ஸ்மார்ட்போன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
ஐடெல் P40 அம்சங்கள்:
6.6 இன்ச் HD டிஸ்ப்ளே, 1612x720 பிக்சல் ரெசல்யுஷன்
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
6 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
7 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆக்டாகோர் SC9863A பிராசஸர்
13MP பிரைமரி கேமரா
QVGA கேமரா, ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்
6000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஐடெல் P40 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃபோர்ஸ் பிளாக், டிரீமி புளூ மற்றும் லக்சரியஸ் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.