மொபைல்ஸ்

நார்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது ஒன்பிளஸ்

Published On 2024-06-24 16:23 GMT   |   Update On 2024-06-24 16:23 GMT
  • இந்திய சந்தையில் ஜூன் 27-ந்தேதி முதல் அமேசான் இணைய தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
  • 8GP ரேம், 128GP ஸ்டோரேஜ், 8GP ரேம், 256GP ஸ்டோரேஜ் உடன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட் போன்களை வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் செல்போன் தயாரிப்பு நிறுவனம் நார்ட் சிஇ 4 லைட் 5ஜி (Nord CE 4 Lite 5G) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ஜூன் 27-ந்தேதி முதல் அமேசான் இணைய தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜியின் குறைந்த விலை போன் இதுவாகும். 80வாட் சூப்பர்வூக் (SUPERVOOC) பாஸ்ட் சார்ஜிங் உடன் 5500mAh பேட்டரி வசதி கொண்டது.

8GP ரேம், 128GP ஸ்டோரேஜ், 8GP ரேம், 256GP ஸ்டோரேஜ் உடன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட் போன்களை வெளியிட்டுள்ளது.

8GP ரேம், 128GP ஸ்டோரேஜ் போன் 19,999 ரூபாய்க்கும், 8GP ரேம், 256GP ஸ்டோரேஜ் போன் 22,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மெகா ப்ளூ, சூப்பர் சில்வர், அல்ட்ரா ஆரஞ்ச் (இந்தியா மட்டும்) ஆகிய கலர்களில் வெளியாக உள்ளது.

அமேசான் இணையதளத்தில் ஜூன் 27-ந்தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. ஆயிரம் ரூபாய் வரை வங்கி தள்ளுபடியுடன் 3 மாதம் no-cost EMI வசதியுடன் வழங்குகிறது.

Tags:    

Similar News