மொபைல்ஸ்

31,999 ரூபாயில் ஒன்பிளஸ் நோர்டு 4 விரைவில் இந்தியாவில் அறிமுகம்

Published On 2024-07-03 16:20 GMT   |   Update On 2024-07-03 16:20 GMT
  • 5500 mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் இருக்கும்.
  • சீனாவில் ஏஸ் 3வி பெயரில் வெளியானது. இது ஒன்பிளஸ் நோர்டு 4 என மறுபெயரிட்டு இந்தியாவில் வெளியாக வாய்ப்பு.

சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பிளஸ் நோர்டு 3 (OnePlus Nord 3) போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்டு 4 (OnePlus Nord 4) செல்போனை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு விலை 31,999 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரேசன் 3 SoC பிராசசர் கொண்டதாகவும், 5500 mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் இருக்கும்.

இந்த போன் உடன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ப்ரோ, ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் ஆகியவையும் வெளியாக வாய்ப்புள்ளது.

சீனாவில் கடந்த மார்ச் மாதம் ஒன்பிளஸ் ஏஸ் 3வி பெயரில் செல்போன் வெளியானது. இது ஒன்பிளஸ் நோர்டு 4 என மறுபெயரிட்டு இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 மெகாபிக்சல் பிரைமரி சென்சாருடன் டுயல் ரியர் கேமரா செட்டப் கொண்டதாகவும், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டதாகவும் இருக்கும்.

Tags:    

Similar News