8 ஜிபி ரேம் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - விரைவில் வெளியீடு
- ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி 10 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வெளியான தகவல்களில் ரியல்மி 10 ஸ்மார்ட்போன் RMX3630 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த வரிசையில், ரியல்மி 10 ஸ்மார்ட்போன் விவரங்கள் பியுரோ ஆப் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS), இந்தோனேசியா டெலிகாம் மற்றும் NBTC வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இதுதவி ரியல்மி 10 ஸ்மார்ட்போன் CB டெஸ்ட் சான்று பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டது. கீக்பென்ச் வலைதளங்களின் படி ரியல்மி 10 ஸ்மார்ட்போன் RMX3630 மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த பிராசஸர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்-ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
கீக்பென்ச் தள விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 10 4ஜி வேரியண்ட்-ஆக இருக்கும் என தெரிகிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் உடன், மாலி G-57 GPU, 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மி 10 ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 483 புள்ளிகளை பெற்று இருக்கிறது. மல்டி கோர் சோதனையில் இந்த ஸ்மார்ட்போன் 1668 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் பெற்று இருக்கும் சான்றிதழ்களை பொருத்து ரிய்லமி 10 மாடல் இந்தியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் கொண்டிருக்கிறது.