மொபைல்ஸ்

ரியல்மி 13 ப்ரோ, ப்ரோ பிளஸ் ஜூலை 30-ல் அறிமுகம்

Published On 2024-07-15 15:20 GMT   |   Update On 2024-07-15 15:20 GMT
  • ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் போன்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • இதனைத் தொடர்ந்து இரண்டு வகையிலான போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ரியல்மி நிறுவனம் ரியல்மி 13 ப்ரோ, ரியல்மி 13 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டு செல்போன்களை வருகிற 30-ந்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

தற்போது விற்பனையில் இருந்து வரும் ரியல்மி 12 ப்ரோ சீரிஸை தொடர்ந்து இந்த இரண்டு வகை செல்போன்களை வெளியிட இருக்கிறது.

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போன் பின்பக்கம் இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும். Optical Image Stabilization உடன் 50MP சோனி லைஒய்டி 701 சென்சார் மற்றும் 3x optical zoom உடன் 50MP சோனி எல்ஒய்டி 600 சென்சார் அடங்கிய கேமரவாக இருக்கும். இந்த கேமரா மூலம் எடுக்கப்படும் போட்டோக்கள் ஹை-குவாலியாட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இரண்டு வெகை செல்போன்களில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும். ஏஐ வசதியுடன படங்களை மாற்றியமைக்கும் வசதி உள்ளது.

ரியல்மி ப்ரோ பிளஸ் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் பிராசசரை கொண்டதாக இருக்கும். 8GB RAM/128GB storage, 8GB RAM/256GB storage, 12GB RAM/256GB storage, 12GB RAM/512GB storage ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கும். ரியல்மி 13 ப்ரோ ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 பிராசசர் கொண்டதாகும்.

Tags:    

Similar News