200MP பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்
- ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
- சீன வெர்ஷனில் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் 50MP கேமரா கொண்டிருந்தது.
சியோமி நிறுவனம் சீன சந்தையில் தனது ரெட்மி நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
இது குறித்து சியோமிடைம் வெளியிட்டுள்ள தகவல்களில் ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் சாம்சங்கின் ISOCELL HP3 கேமரா சென்சார் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களில் உள்ள 50MP பிரைமரி கேமரா சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தெரிகிறது.
சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் 200MP சாம்சங் ISOCELL HP3 கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் சீன வெர்ஷனில் 50MP கேமரா தான் வழங்கப்பட்டு இருக்கிறது.