மொபைல்ஸ்

50MP கேமரா, 25W சார்ஜிங், பட்ஜெட் விலையில் புது சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2024-09-12 09:20 GMT   |   Update On 2024-09-12 09:20 GMT
  • புது ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி M சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புது ஸ்மார்ட்போன் கேலக்ஸி M05 என அழைக்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M05 மாடலில் 6.7 இன்ச் HD+ ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், ARM மாலி-G52 GPU, அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ கோர் 6 ஓஎஸ் கொண்ட புது சாம்சங் ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

 

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி M05 மாடலில் 3.5mm ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

விலையை பொருத்தவரை புதிய கேலக்ஸி M05 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மின்ட் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. விற்பனை அமேசான் மற்றும் சாம்சங் வலைதளங்கள், தேர்வு செய்யப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News