மொபைல்ஸ்

பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங் - என்ன ஸ்பெஷல்?

Published On 2024-09-23 11:21 GMT   |   Update On 2024-09-23 11:21 GMT
  • புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி M சீரிசில் இடம்பெற்றுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேலக்ஸி M55s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்பளே, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 6.1 கொண்ட புது சாம்சங் ஸ்மார்ட்போன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, எல்இடி ஃபிளாஷ், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ் கனெக்ட்விட்டி கொண்டுள்ளது. இத்துடன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைபி சி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விலையை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M55s ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தண்டர் பிளாக் மற்றும் கோரல் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை செப்டம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது.

Tags:    

Similar News