null
ரூ. 1.09 லட்சம் துவக்க விலையில் கேலக்ஸி Foldable போன்கள் அறிமுகம்
- 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
- இதில் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், இரு மாடல்களின் முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி Z போல்டு 6 மாடலில் வெளிப்புறம் 7.6 இன்ச், உள்புறம் 6.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 12MP, 50MP மற்றும் 10MP பிரைமரி கேமரா சென்சார்கள், 10MP செல்பி கேமரா மற்றும் 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 12MP+50MP பிரைமரி கேமரா, 10MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
விலை விவரங்கள்:
கேலக்ஸி Z ப்ளிப் 6 (12ஜிபி+256ஜிபி) ரூ. 1,09,999
கேலக்ஸி Z ப்ளிப் 6 (12ஜிபி+512ஜிபி) ரூ. 1,21,999
கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+256ஜிபி) ரூ. 1,64,999
கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+512ஜிபி) ரூ. 1,76,999
கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+1டிபி) ரூ. 2,00,999
புதிய கேலக்ஸி Z சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது.