டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச் ஹங்கேரி வீரருடன் மோதினார்.
- இதில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஹங்கேரி வீரர் மார்ட்டன் பியூசோவிக்சுடன் மோதினார்.
முதல் செட்டை 7-6 என கைப்பற்றிய ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-0 எனவும், மூன்றாவது செட்டை 6-3 என வென்று அடுத்த சுற்றையும் உறுதி செய்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-1 என வென்றார். 2வது செட்டை டேனியல் 6-3 என வென்றார். இதையடுத்து அல்காரஸ் 3-வது மற்றும் 4-வது செட்டை 6-1, 6-2 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.