டென்னிஸ்

இகா ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினர் இகா ஸ்வியாடெக், ஜபேர்

Published On 2023-06-06 02:33 IST   |   Update On 2023-06-06 02:33:00 IST
  • உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனையை வென்றார்.
  • காலிறுதி ஆட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன.

பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் துனிசியா வீராங்கனை ஓன்ஸ் ஜபேர், அமெரிக்கா வீராங்கனை பெர்னார்டா பெராவுடன் மோதினார். இதில் ஜபேர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கஃப், ஸ்லோவோகினியாவின் அன்னா கரோலினாவுடன் மோதினார். இதில் கஃப் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை லெசியாவுடன் மோதினார்.

முதல் செட்டில் இகா ஸ்வியாடெக் 5-1 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது உடல்நலக் குறைவால் லெசியா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதி ஆட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன.

Tags:    

Similar News