டென்னிஸ்
டென்னிஸ் தரவரிசை - போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதலிடம் பெற்றார்
- டென்னிஸ் போட்டி வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டு வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மகளிர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பாரீஸ்:
டென்னிஸ் போட்டியில் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சான் டீகோ ஓபன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசியா நாட்டின் டோன்னா வெகிச் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இகா ஸ்வியாடெக் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இது, நடப்பு ஆண்டில் அவர் பெறும் 64-வது சாதனை வெற்றியாகும்.
இந்த தரவரிசை பட்டியலில் ஆன்ஸ் ஜேபியர் 2-வது இடத்திலும், ஆனெட் கொன்டாவிட் 3-வது இடத்திலும், ஆரைனா சபலென்கா 4-வது இடத்திலும், ஜெஸ்சிகா பெகுலா 5-வது இடத்திலும் உள்ளனர்.