என் மலர்
- சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார்
- ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
இந்த நிலையில் படத்தின் தலைப்பு பராசக்தி என வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ 1 நிமிடம் 50 வினாடிகள் படக்குழு உருவாக்கி இருப்பதாகவும் அந்த வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அன்பு, பாசம் போன்ற உணர்வுகளின் அடையாளம்தான் கரும்பு. அன்பும் பாசமும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும்.
- தனக்கு மிகவும் பசிக்கிறது என்று சொல்லி, ஒரே ஒரு கரும்பு தருமாறு வியாபாரியிடம் கேட்டார்.
பந்த பாச உணர்வைத் தூண்டுபவன் மன்மதன். கரும்பு வில்லைப் பயன்படுத்தி அம்பு எய்து ஆண்-பெண் ஆகியோருக்கு இடையே ஈர்ப்பைத் தோற்றுவிப்பவன். காதல் தெய்வமான மன்மதன் ரதிதேவியின் கணவன்.
இந்த உலகம் தொடர்ந்து நடைபெறுவதற்கு மன்மதனின் பணி இன்றியமையாதது. அவனால் தான் உலகில் வம்ச விருத்தி உண்டாகிறது.
மன்மதனுடைய கரும்பு வில்லின் நாண், கயிற்றால் ஆனதல்ல. தொடர்ச்சியான வண்டுகளின் வரிசைதான் மன்மதன் வில்லின் நாணாக இருக்கிறது.
அந்த நாணிலிருந்து ஐந்து மலர்களை அம்புகளாக்கி மனிதர்கள் மேல் சூட்சுமமாக எய்கிறான் அவன். தாமரை, அசோகம், குவளை, மாம்பூ, முல்லை ஆகிய ஐந்து மலர்கள்தான் மன்மதனின் அம்புகள்.
கரும்பு வில்லில், வண்டு நாணை இழுத்து, மலர் அம்புகளைப் பொருத்தி அவன் எய்தால் யாராயிருந்தாலும் பந்த பாசங்களுக்கு ஆட்பட வேண்டியதுதான்.
மன்மதனின் கரும்பு வில்லிலிருந்து புறப்படும் கணையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. மன்மதனைப் பற்றிச் சொல்லும்போது `காமன் எல்லோருக்கும் காமன்!` எனத் தமிழும் ஆங்கிலமும் கலந்து சிலேடை நயத்தோடு சொல்வார் வாரியார் சுவாமிகள்.
ஒரே ஒருவரிடம் மட்டும் மன்மதனின் ஆற்றல் பலிக்கவில்லை. சூரபத்மனை வதம் செய்ய ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்பதால், பரமசிவன்மேல் தன் கரும்பு வில்லைக் கொண்டு மலர்க் கணைகளை மன்மதன் எய்ய வேண்டும் என வேண்டினார்கள் தேவர்கள்.
அவர்கள் சொன்னபடியே மலர் அம்புகளைப் பரமசிவனை நோக்கி எய்தான் மன்மதன். சிவபெருமான் அதனால் தம்முடைய தவம் கலைக்கப்பட்டார்.
யார் தன் தவத்தைக் கலைத்தது எனக் கடும் சீற்றத்துடன் நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அவ்வளவுதான். அவர்மேல் மலர்க்கணை தொடுத்த மன்மதன் எரிந்து போனான் என்கிறது சிவபுராணம்.
பிறகு ரதிதேவி வேண்டியதன் பேரில் ரதியின் கண்ணுக்கு மட்டும் மன்மதன் தெரிவான் என்றும் மற்றவர் கண்ணுக்குத் தெரியமாட்டான் என்றும் வரம் கொடுத்தார் சிவன்.
அதனால்தான் மன்மதன் இப்போது யார் கண்ணுக்கும் தெரியாமல் பலர்மேல் மலர் அம்பு எய்து தன் பணியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான்.
பொதுவாக தோற்றவர் கையிலுள்ள ஆயுதம், வென்றவர் கைக்கு வருவது நடைமுறை வழக்கம். அந்த வழக்கப்படியே தோற்றுப்போன மன்மதனின் கரும்பு வில் சிவனின் கைக்கு வந்துவிட்டது. அதை, தான் வாங்கித் தன் கரத்தில் வைத்துக் கொண்டாள் அன்னை காமாட்சி.
அன்பு, பாசம் போன்ற உணர்வுகளின் அடையாளம்தான் கரும்பு. அன்பும் பாசமும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். கட்டுமீறிச் சென்றால் துன்பம்தான். அதை உணர்த்தவே அன்னை தன் கையில் கரும்பை வைத்திருக்கிறாள்.
மன்மதனின் கரும்பு காமத்தைத் தூண்டக் கூடியது. அன்னை காமாட்சி தேவியின் கையில் உள்ள கரும்பு தன்னை வழிபடுபவர்களின் மனத்திலிருந்து காமத்தை அகற்றக் கூடியது.
இதுதான் மன்மதன் கையில் இருந்த கரும்பிற்கும் காமாட்சி கையில் உள்ள கரும்பிற்குமான முக்கிய வேறுபாடு.
`காமாட்சியை வழிபட்டால், தேவியின் திருக்கரத்தில் உள்ள கரும்பின் கருணையால் நாம் காம உணர்வை வெல்வோம். காம தகனம் செய்த சிவபெருமானின் மனைவி நம் உள்ளத்தில் உள்ள காமத்தைத் தகனம் செய்துவிடுவாள்.` என்கிறார் வாழ்நாளெல்லாம் காஞ்சி காமாட்சியை வழிபட்ட காஞ்சிப் பரமாச்சாரியார்.
`கரும்பாயிரம் பிள்ளையார் கோயில்` என்றொரு கோயில் கும்பகோணத்தில் உண்டு. அங்கே உறையும் விநாயகரின் திருநாமம்தான் `கரும்பாயிரம் பிள்ளையார்` என்பது. அவருக்கு அப்படியொரு பெயர் வந்ததற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
கரும்பு வியாபாரி ஒருவன் தன் வண்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்தான். அவன் விநாயகர் கோயில் எதிரே வரும்போது அவன்முன் ஒரு சிறுவனாய்த் தோன்றினார் விநாயகர்.
யானை முகத்தை உடைய அவருக்கு யானைகள் விரும்பிச் சாப்பிடும் கரும்பைத் தானும் சாப்பிட வேண்டும் என ஆசை வந்துவிட்டது. தனக்கு மிகவும் பசிக்கிறது என்று சொல்லி, ஒரே ஒரு கரும்பு தருமாறு வியாபாரியிடம் கேட்டார்.
அவர் யாரென்று அறியாத வணிகன், அனைத்தும் உப்புக் கரிக்கும் என்று சொல்லி அவரை ஏமாற்றிவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று விட்டான்.
`சிறுவன் மேல் இரக்கமில்லையே உனக்கு? நீ சொன்னபடியே, உன் வண்டியில் உள்ள ஆயிரம் கரும்பும் உப்புக் கரிக்கட்டும்!` எனக் கூறிவிட்டு அருகிலுள்ள கோவிலில் சென்று மறைந்துவிட்டான் சிறுவன்.
அடுத்த கணமே ஆயிரம் கரும்பும் தித்திக்காமல் உப்புக் கரிக்கத் தொடங்கியது. வாயில் போட்டால் உப்புக் கரிக்குமானால், அந்தக் கரும்பு எப்படி வியாபாரம் ஆகும்? ஒரு கரும்பைக் கூட வாங்குவார் இல்லை.
வணிகன் தவற்றை உணர்ந்தான். சிறுவன் கேட்டபோது கரும்பு கொடுக்காதது தப்புத்தான் எனவும் தன்னை இறைவன் மன்னிக்க வேண்டும் எனவும் உள்ளம் உருகி வேண்டினான்.
அன்றிரவு விநாயகர் அவன் கனவில் தோன்றினார். அவனை மன்னித்தார். ஏழைகளுக்கு இரங்கவேண்டும் என்று அவனுக்கு நீதி புகட்டினார்.
அவன் வேண்டியபடி, மறுபடி ஆயிரம் கரும்பும் தித்திக்கும் என அருளினார். பின் கனவிலிருந்து மறைந்துபோனார்.
மறுநாள் கண்விழித்து எழுந்த வணிகன் கனவை நினைத்து நினைத்து நெகிழ்ந்தான். தன் வண்டியில் உள்ள ஒரு கரும்பை எடுத்துக் கடித்துப் பார்த்தான்.
அது சாதாரணமாய்க் கரும்பு தித்திக்கும் தித்திப்பை விடப் பல மடங்கு கூடுதலாய்த் தித்தித்தது. பிறகென்ன, கரும்புகள் விறுவிறுவென்று விற்றுப் போயின.
ஆயிரம் கரும்பையும் விநாயர் தித்திக்கச் செய்த கதை இதுதான் என்கிறது கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் பற்றி வழிவழியாக வழங்கும் தலபுராணக் கதை.
பட்டினத்தார் கையில் ஒரு கரும்பு உண்டு. அந்தக் கரும்பு பற்றி, கரும்பைப் போலவே இனிப்பான ஒரு கதையும் உண்டு.
பட்டினத்தாருக்கும் முன்பாகவே அவரது சீடர் பத்திரகிரியாருக்கு திருவிடைமருதூரில் இறையருளால் முக்தி கிடைத்துவிட்டது. பத்திரகிரியார் இறைஜோதியில் கலந்ததைக் கண்ணால் கண்டார் பட்டினத்தார்.
`என் சீடனுக்கே முக்தி கிட்டி விட்டதே ஐயனே! எனக்கு எப்போது முக்தி கிட்டும்?` என உள்ளம் உருகச் சிவபெருமானை வேண்டினார்.
சிவபெருமான் அவர்முன் தோன்றி, அவர் கையில் ஒரு கரும்பைக் கொடுத்தார்.
`இந்தக் கரும்பைத் தாங்கியவாறு திருத்தல யாத்திரை நிகழ்த்து. ஒவ்வொரு திருத்தலத்திலும் மேற்புற நுனியைக் கடித்துப் பார். எந்தத் திருத்தலத்தில் இந்தக் கரும்பின் மேற்புறம் இனிக்கிறதோ அங்கு உனக்கு முக்தி அருளப்படும்.` என அருளினார்.
பட்டினத்தார் கையில் கரும்போடு திருவெண்காடு, சீர்காழி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்குச் சென்றார். ஒவ்வொரு திருத்தலத்திலும் தான் கையில் ஏந்தியிருந்த கரும்பின் நுனியைக் கடித்துப் பார்த்தார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை.
ஏக்கத்தோடு பல திருத்தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார், சென்னை அருகே திருவொற்றியூர் வந்தபோது கரும்பின் நுனி தித்தித்தது. அதுவே தாம் முக்தியடைய இருக்கும் திருத்தலம் என்பதைப் பட்டினத்தாரின் உள்மனம் உணர்ந்து கொண்டது.
அங்கிருந்த சிறுவர்களுடன் விளையாடலானார் அவர். அவர்களைத் தன்னைக் கூடையால் மூடும்படி வேண்டிக் கொண்டார். அவர்கள் அவ்விதமே மூடினார்கள்.
ஆனால் அந்தக் கூடையிலிருந்து அல்லாமல் வேறோர் இடத்தில் தோன்றினார் அவர். பல சித்திகள் பெற்ற சித்தராயிற்றே அவர்? சிறுவர்கள் திகைத்தார்கள்.
ஓடோடிப் போய் அங்கும் அவரைக் கூடையால் மூடினார்கள். இப்படியான விளையாட்டு பலமுறை நடந்தது.
இறுதியில் ஒரு கூடையால் மூடப்பட்ட அவர், சிவலிங்கமாக மாறிச் சிவனுடன் கலந்தார். அந்தக் கூடையைத் திறந்துபார்த்த சிறுவர்கள் திகைத்தார்கள்.
அவர்கள் ஓடோடிப் போய்த் தங்கள் பெற்றோரிடம் இந்த அதிசயத்தைத் தெரிவிக்க, பின்னர் திருவொற்றியூரில் அந்த இடத்தில் சமாதி தோற்றுவிக்கப்பட்டது.
கரும்பிலிருந்து எடுக்கப்படும் சாறு கருப்பஞ்சாறு எனப்படுகிறது. அதன் தித்திப்பு புகழ்பெற்றது.
மாணிக்க வாசகரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் வள்ளலார். மாணிக்க வாசகர் எழுதிய `திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்` என்று சொல்வதுண்டே?
அப்படிப்பட்ட உள்ளத்தை உருக்கும் மாணிக்கவாசகரின் வாசகங்களைத் தான் கலந்து பாடும்போது கருப்பஞ்சாற்றில் தேனையும் பாலையும் கலந்ததுபோல் இனிமை உண்டாகிறது என மணிவாசகரைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார்.
`வான்கலந்த மாணிக்க வாசக! நின்
வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்
சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்
சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல்
இனிப்பதுவே!`
பொங்கல் பண்டிகையில் கரும்பு முக்கிய இடம் வகிக்கிறது. கரும்பில்லாமல் யாரும் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. கரும்பின் விளைச்சலும் பொங்கலை ஒட்டியேதான் தை மாதத்தில் நிகழ்கிறது.
`கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?` என்றொரு பழமொழி உண்டு. கரும்பு இனிக்கக் கூடியது. அந்த இனிப்புக்காகவே அதைத் தின்னலாம். அப்படியிருக்க அவ்விதம் தின்பதற்குக் கூலி வேறு வேண்டுமா என்ன?
ஒரு செயலைச் செய்வதே மனத்திற்கு மகிழ்ச்சி தருகிறபோது அதைச் செய்வதற்கு எதற்குக் கூலி என்பதை விளக்க வந்த பழமொழி இது.
நம் ஆன்மிகத்தில் கரும்புச் செய்திகள் நிறைய உண்டு. நமது ஆன்மிகமே நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் தித்திக்கும் கரும்பு தானே?
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com
- சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும்.
- ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாய்மை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் பல நேரங்களில் இந்த மகிழ்ச்சி எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. சில காரணங்களால் கர்ப்பம் தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான உடல் எடை
ஆரோக்கியமான உடல் எடை இல்லாமல் இருந்தால் அவை முட்டைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் கர்ப்பமடையும் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக எடை கொண்ட பெண்கள் தான் குறிப்பாக கர்ப்பம் அடைய மிகவும் சிரமம் அடைகிறர்கள்.
அதேபோல் ஆண்கள் பருமனாக இருப்பதாலும் கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுமுறையுடன் தொடர்ந்து உடல் எடையை பராமரிக்கலாம்.
சரியான மாதவிடாய் சுழற்சி
சரியான மாதவிடாய் சுழற்சி முறையாக கர்ப்பத்தை எளிதாக்கும். உங்களின் அதிகபட்ச மாதவிடாய் நாட்கள் 3 நாட்கள் ஆகும்.
தைராய்டு பிரச்சனைகள்
தைராய்டு ஹார்மோன்களில், T3 மற்றும் T4 ஆகியவையே இனபெருக்கத்துடன் தொடர்புடையவை. உணவு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஆகியவற்றின் மீது இவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
தைராய்டு ஹார்மோன் சமநிலையற்று இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம். கர்ப்பங்கள் மற்றும் கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும்.
பி.சி.ஓ.ஸ் பரிசோதனை
பி.சி.ஓ.எஸ் என்பது சினைப்பை நீர்க்கட்டி ஆகும். இதனால் ஹார்மோன் குறைபாடு, கருத்தரித்தலில் பிரச்சனை, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
பி.சி.ஒ.எஸ் இருந்தால் உங்கள் சினைப்பையில் சிறிது சிறிதாக நீர்கட்டிகள் உருவாகும். அப்படி நடந்தால் கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதனால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படும். சரியான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதனை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
ஹார்மோன் குறைபாடு
பெண்களின் ஹார்மோன் அளவுகளில் மிகக் குறைந்த அளவில் மாறுதல் ஏற்பட்டால் கூட எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
விந்தணுக்கள் பரிசோதனை
தம்பதிகள் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கும்போது விந்து பகுப்பாய்வு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பகுப்பாய்வு குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது விந்தணு செயலிழப்பு கருவுறாமைக்கு காரணமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் இந்த சோதனை செய்து கொள்வதன் மூலம் உங்கள் குறைகளை கண்டறிந்து அதனை சரிசெய்து விடலாம்.
ஃபோலிக் அமிலம்
கருவுற்ற முதலில் குழந்தையின் முதுகெலும்பு மூளை, மற்றும் நரம்புக் குழாய் போன்றவைகள் உருவாகும். அதற்கு இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நரம்புக் குழாய் குறைபாடுகளிலிருந்து குழந்தையின் அதிகபட்ச பாதுகாப்பிற்காக ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் சோதனை
நீங்கள் 35 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருந்து கர்ப்பத்தை திட்டமிட்டால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கர்ப்பம் தரிப்பதற்கு முன் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
உடற்பயிற்சி
கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை உடற்பயிற்சி செய்தல் தான். லேசானது முதல் மிதமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை சரிசெய்து, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை சீராக்கும்.
- கல்வி உதவித் தொகை என கூறி வங்கி கணக்கு, ஓடிபி போன்றவற்றை கேட்டு பணத்தை மோசடி செய்ய கும்பல் ஒன்று முயற்சி செய்வதாக புகார் கூறப்பட்டுள்ளது.
- உரிய விசாரணை நடத்தி மோசடியாளர்களை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
கல்வி உதவித் தொகை வந்துள்ளதாக கூறி தமிழகம் முழுவதும் பிளஸ்2 மாணவர்களின் பெற்றோரை குறி வைத்து ஆன்லைனில் மோசடி செய்ய கும்பல் ஒன்று முயற்சி செய்வதாக புகார் கூறப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை பெறும் பிளஸ்2 மாணவர்களின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விவரங்களை மோசடியாளர்கள் கேட்கின்றனர். கல்வி உதவித் தொகை என கூறி வங்கி கணக்கு, ஓடிபி போன்றவற்றை கேட்டு பணத்தை மோசடி செய்ய கும்பல் ஒன்று முயற்சி செய்வதாக புகார் கூறப்பட்டுள்ளது.
கல்வி உதவித் தொகை பயனாளிகளாக இருக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரை மட்டும் மோசடியாளர்கள் தொடர்பு கொள்கின்றனர். உரிய விசாரணை நடத்தி மோசடியாளர்களை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கே. நிஷிமோட்டோ ஆகியோர் மோதினார்.
- முதல் செட்டை நிஷிமோட்டோவும் 2-வது செட்டை லக்ஷயா சென்னும் வென்றனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கே. நிஷிமோட்டோ ஆகியோர் மோதினார்.
இதில் முதல் செட்டை நிஷிமோட்டோவும் 2-வது செட்டை லக்ஷயா சென்னும் வென்றனர். தொடர்ந்து 3-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 3-வது செட்டில் லக்ஷயா சென் 21-23 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இதனால் 2-வது சுற்று ஆட்டத்தில் 16-21, 21-12, 21-23 என்ற கணக்கில் லக்ஷயா சென் தோல்வியடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.
- கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
- கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கோவில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு 9அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை இருந்து வருகிறது.
எனவே கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், திருச்செந்தூரில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக 2வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.
- திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் உள்ள சில கழிவுநீர் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.
- கழிவு நீர் தொடர்பான புகார்களுக்கு 81449 30903, 81449 30906 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாதவரம் ரவுண்டானா பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் கழிவு நீர் உந்து குழாய் இணைக்கும் பணிகள் இன்று காலை 9 மணி முதல் நாளை (24-ந்தேதி) இரவு 10 மணி வரை நடக்கிறது. இந்த பணிகள் நடைபெறும் 2 நாட்களிலும் மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் உள்ள சில கழிவுநீர் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.
எனவே இந்த மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் கழிவு நீர் தொடர்பான புகார்களுக்கு 81449 30903, 81449 30906 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- என்.எஸ்.கே. நகர், மற்றும் உள்வட்ட சாலை பாலத்தில் உள்ள தற்காலிக தரைப்பாதைகள் அகற்றப்பட்டன.
- அனைத்து தற்காலிக தளங்களையும் அகற்றியதை நீர்வளத்துறை சமீபத்தில் உறுதிப்படுத்தியது.
சென்னை:
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்ட கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் கூவம் ஆற்றின் வழியே செயல்படுத்தும் பணி தொடங்கியது.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் கூவம் நதியில் அமைக்கப்படும் பறக்கும் சாலை திட்டத்தால் நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனக் கூறி தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்தஉடன் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ.5509 கோடியில் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில் இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இதைத் தொடர்ந்து கூவம் ஆற்றின் குறுக்கே மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை பணி மீண்டும் தொடங்கியது. தீர்ப்பாயத்தின் அனுமதியை தொடர்ந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுமான பணியை தொடங்கி உள்ளது.
கடந்த ஆண்டு கூவம் ஆற்றங்கரையில் குறிப்பாக அமைந்தகரை அருகே வெள்ள அபாயத்தை உணர்த்தும் வகையில் குப்பைகள் கொட்டப்படுவதை அறிந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகள் உள்ளதா என்பதை சரிபார்க்க அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.
தமிழக நீர்வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இது தொடர்பான விரிவான அறிக்கைகளை தீர்ப்பாயத்திற்கு சமர்ப்பித்தது. பாடிக்குப்பம் மற்றும் செயின்ட் ஆண்ட்ரூஸ் பாலம் இடையே உள்ள நீளம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து அனைத்து தற்காலிக தளங்களையும் அகற்றியதை நீர்வளத்துறை சமீபத்தில் உறுதிப்படுத்தியது.
மேலும் என்.எஸ்.கே. நகர், மற்றும் உள்வட்ட சாலை பாலத்தில் உள்ள தற்காலிக தரைப்பாதைகள் அகற்றப்பட்டன. குப்பைகள் அகற்றப்பட்டு, கூவம் ஆற்றின் கரைக்கு மாற்றப்பட்ட தற்கான புகைப்பட ஆதாரங்களையும் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை முடித்தது. தேசிய நெடுஞ்சாலை துறைக்கு தேவையான போது மட்டுமே தற்காலிக நடைபாதைகள் மற்றும் 'பைலிங்'ரிக்குகளை அமைக்க அனுமதித்தது.
- பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்தது.
- 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனோடு நான் எடுத்த படம் வெளியாகிவிட்டது என்று சீமான் பதில்
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து பேசிய சீமான், "பெரியாரைப் பற்றி நான் தொடர்ந்து பேசி வருவதால் எங்கள் தலைவர் பிரபாகரனோடு நான் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டது என்கிற அவதூறை பரப்பி வருகிறார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனோடு நான் எடுத்த படம் வெளியாகிவிட்டது. இப்போது எடிட் செய்து கொடுத்ததாக சொல்லும் நபர் இவ்வளவு நாட்களும் என்ன செய்து கொண்டு இருந்தார்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா என சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி எழுப்பி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "அந்த போட்டோ எடிட் செய்யப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று காட்ட சொல்லுங்கள். 15 வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று சீமான் கேட்டுள்ளார். அதுவே ஒரு ஆதாரம் என்று தான் எடுத்து காட்டுகிறோம் அதற்கு ஒரு ஆதாரத்தை எங்கிருந்து காட்ட முடியும்.
அந்த புகைப்படத்தை எப்படி எடிட் செய்யப்பட்டது என்று டெமோ காட்ட சொல்கிறார். இணையத்தில் ஒரு படம் இப்படி தான் எடிட் செய்யப்படுகிறது என்று டெமோ காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு தனியாக நான் ஒரு டெமோ காட்டவேண்டுமா?
பிரபாகரனை பொய் என்று நான் சொல்லிவிட்டதாக சீமான் சொல்கிறார். பிரபாகரன் தான் உண்மையான தலைவர் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செங்கோட்டையன் அவர்கள் வந்து நான் சொன்னது உண்மையா பொய்யா என்று சொல்லியிருந்தால் இந்த பிரச்சனையே முடிந்திருக்கும். அவரை ஏன் பேசவிடாமல் தடுக்கிறீர்கள்" என்று பேசியுள்ளார்.
- சென்னையில் வருகிற 25-ந்தேதி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
- பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகள் குறித்தும் கோரிக்கைகள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம்.
உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ரேசன் கார்டுகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம் முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னையில் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் 12 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ள இந்த முகாம்களில் பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகள் குறித்தும் கோரிக்கைகள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- 5 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இருமல் இருந்தால் “வாக்கிங் நிமோனியா” பாதிப்பாக இருக்கலாம்.
- பொதுவாக இந்த நோய் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது.
தற்போது "வாக்கிங் நிமோனியா" என்ற வித்தியாசமான நோய் பரவி வருகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் இந்த நோய் பாதிக்கிறது. லேசான காய்ச்சல், தொடர் இருமல், மூச்சுத்திணறல், தொண்டை புண் மற்றும் தோல் வெடிப்பு உள்ளிட்ட வைகள் "வாக்கிங் நிமோனியா" தொற்றின் அறிகுறிகளாகும்.
5 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இருமல் இருந்தால் "வாக்கிங் நிமோனியா" பாதிப்பாக இருக்கலாம். ஆகவே அந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் "வாக்கிங் நிமோனியா" பாதித்தவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் பாக்டீரியா சுவாசத்துளிகள் மூலம் பரவுகிறது. ஆகவே இந்த நோய் பாதித்தவர்கள் முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும். பொதுவாக இந்த நோய் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. ஆனால் கேரளாவில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளும் "வாக்கிங் நிமோனியா" தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
- தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
- வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.
நாளை பெண் குழந்தைகள் தினம்...
இது இந்தியா முன்னெடுத்த பெருமைக்குரிய தினம். இது கடந்த 2008-ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஜனவரி 24-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
என்னதான் பாலின சமத்துவம் பேசப்பட்டு வந்தாலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஒரு கட்டத்தில் அரசுக்கும் ஏற்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற அளவில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை சரிவை நோக்கி சென்றதை சந்தித்த போதுதான் அரசுக்கு பொறி தட்டியது. தாயின் வயிற்றில் இருக்கும் போதே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு கருவிலேயே அழிக்கப்படுவதும், தப்பித்தவறி பிறந்து விட்டால் கூட கள்ளிப்பாலையும், நெல் மணியையும் கொடுத்து அந்த கண்மணிகளை ஈவு இரக்கமில்லாமல் அழித்து வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நம்ம கடலூர் மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கும் 854 பேர் தான் பெண்கள் என்ற கணக்குதான் இந்திய அளவில் பெண் குழந்தைகளை காக்கும் அளவுக்கு நாட்டின் கண்களை திறக்க வைத்தது. பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கினார்கள்.
சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், ஏற்றத்தாழ்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் குழந்தைகளை காப்பாற்றுதல், பாலின விகிதங்களை பராமரித்தல், குழந்தை திருமணம், அவர்களுக்கான சட்ட உரிமைகள், மருத்துவம், மரியாதை போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம்.
தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரத்தையும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரத்தையும் அரசே டெபாசிட் செய்கிறது. அந்த குழந்தை திருமண வயதை எட்டும் போது ரூ.3 லட்சம் கிடைக்கும்.
அரசு திட்டங்கள் போட்டு காப்பதைவிட மக்களின் மனமாற்றம் தான் முழு வெற்றியை தரும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து. பெண் குழந்தை என்பது பல பரிணாம வளர்ச்சியோடு வாழ்க்கையை பரிபூரணமாக்குகிறது. எனவேதான் பெண் குழந்தைகளை கொண்டாடுகிறோம். வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.
அந்த வீட்டின் ஆனந்த யாழை மீட்டுபவள் அவள். "வா.. வா என் தேவதையே... பெண் பூவே வா... வா... பொய் வாழ்வின் பூரணமே..." என்று பெண் குழந்தைகளின் பிறப்பை உயர்வாக சித்தரித்து பாடுகிறார்கள்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அவர்களின் உரிமை, சட்ட பாதுகாப்பில் அடங்கி இருக்கிறது. குழந்தை திருமணம் சட்டப்படி தவறு. அதற்கு தண்டனையும் உண்டு. அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து இளம் வயது கர்ப்பம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குழந்தை திருமணங்கள் அரங்கேற முக்கிய காரணம் இன்றைய சமூக சூழ்நிலையில் பெற்றோர்களுக்கு ஏற்படும் தேவையற்ற பயம். திருமணம் முடிந்துவிட்டால் தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதுகிறார்கள். ஆனால் அது அந்த குழந்தைகளை படு பாதாளத்தில் தள்ளுவது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இளம் வயது கர்ப்பம் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பெண் குழந்தைகள் பிறந்ததும் பெருமைப்படும் பெற்றோர் மிக இளம் வயதிலேயே அந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு காரணம் சமூக அழுத்தமும், நடைபெறும் பாலியல் அத்துமீறல்களும்தான் எனப்படுகிறது.
இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் வளர்ப்பதன் மூலம் களைய முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.