search icon
என் மலர்tooltip icon
    • பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் சேர வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
    • சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது.

    சென்னை:

    துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று தெரியாது. யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லவே முடியாது.

    விஜய் அரசியலுக்கு வந்து இருக்கார். ஆனால் உறுதியாக ஒன்று சொல்கிறேன். தி.மு.க.வுக்கும், தி.மு.க. ஆட்சிக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும். இதனுடைய தாக்கம் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கத்தான் செய்யும். இதற்கு எப்படி எதிர்க்கட்சியினர் வியூகம் வகுக்கப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

    தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டுக்கு செய்யும் தொண்டு என்று துக்ளக் கூறி வருகிறது. இதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாம் ஊழல் கட்சிதான். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் அ.தி.முக. தேசிய விரோத கட்சி கிடையாது. இந்து விரோத கட்சி கிடையாது.

    அராஜகமான கட்சி கிடையாது. இதனால் அதிமுக மீது ஒரு பற்று இல்லை என்றாலும் கூட ஆக்கப்பூர்வமாக பார்க்கும் தன்மை இருக்கிறது. பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் சேர வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

    எடப்பாடி பழனிசாமியிடம் அரசியல் தலைவருக்கு உண்டான போக்கே இல்லை. எல்லா தலைவர்களுடனும் நான் பேசியிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல மனிதர்தான். அவருடன் பழகியிருக்கிறேன். 2021-ல் கையில் வந்த ஒரு வாய்ப்பை எடப்பாடி தவறவிட்டுவிட்டார்.

    பெரியாரை ஏற்றால் பெருமாளை ஏற்க முடியாது.. பெருமாளை ஏற்றால் பெரியாரை ஏற்க முடியாது. ஆனால் இதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டு இருக்கிறது. பெரியார் வக்கிரமானவர். கண்ணகியையும் இழிவுபடுத்துவார். பெண்களையும் இழிவுபடுத்துவார்.. தொல்காப்பியத்தையும் இழிவுபடுத்துவார். திருக்குறளையும் இழிவுபடுத்துவார்.. இதையெல்லாம் சொல்லியது சோ மட்டும்தான்.

    சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன். ஏனென்றால் பெரியாரை எதிர்த்து யாரும் கூறக் கூடாது. உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும் பெரியாரை எதிர்த்து சிலர் பேசத்தான் செய்வார்கள். அதை நாம் ஒன்னும் செய்ய முடியாது.

    பெரியாருக்கு எதிராக கருத்து பேசுகிறவர்களை எல்லாரும் சேர்ந்து பாய்வது என்பது தமிழகத்தில் 50, 60 ஆண்டுகளாக உள்ளது. அதை பத்திரிகை துறையில் உடைச்சது சோ. இப்போது சீமான் அரசியலில் உடைத்துக்கொண்டு இருக்கிறார். இது தமிழ்நாட்டிற்கு நல்லது என்று அவர் கூறினார்.

    • 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன் இஸ்கான் கோவிலை திறந்து வைக்க உள்ளார்.
    • மகாயுதி கூட்டணியை சேர்ந்த 230 எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. டிசம்பர் மாதம் நடந்த மகாயுதி கூட்டணி பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர் இன்று (புதன்கிழமை) மும்பை வருகிறார். அவர் மும்பை கடற்படை டாக்யார்டில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில், ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்ஸ்ரீ போர்கப்பலை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

    இதேபோல மாலை 3.30 மணிக்கு நவிமும்பை, கார்கர் பகுதியில் 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன் இஸ்கான் கோவிலை திறந்து வைக்க உள்ளார்.

    இதற்கிடையே அவர் மதியம் 12 மணியளவில் மும்பையில் மகாயுதி கூட்டணியை சேர்ந்த 230 எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி தலைமை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மும்பையை விட்டு வெளியே செல்ல கூடாது என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க. உயர்மட்ட தலைவர் ஒருவர் கூறுகையில், "ஜனவரி 15-ந் தேதி மும்பை வரும் பிரதமர் மோடி மகாயுதி கூட்டணி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளார். மகாயுதி கூட்டணி எம்.எல்.ஏ.க்களை ஒட்டுமொத்தமாக பிரதமர் சந்தித்து பேச உள்ளது இதுவே முதல் முறை." என்றார்.

    பிரதமர் மோடி எம்.பி.க்களை சந்தித்து பேசி உள்ளார். இதேபோல தேசிய தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து பேசி உள்ளார். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் பா.ஜ.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    சென்னையில் உள்ள 18 இடங்களில் நேற்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

    சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்."

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.
    • உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்தியாவில் ஒரு தொழிலாளி சராசரியாக ஒவ்வொரு வாரமும் 46.7 மணி நேரம் வேலை செய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    இதில் உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. சீனா 46.1 மணி நேரம், பிரேசில் 39 மணி நேரம், அமெரிக்கா 38 மணி நேரம், ஜப்பான் 36.6 மணி நேரம் வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.

    முன்னதாக, L&T சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் "உங்களை (பயணியாளர்கள்) ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப்பார்க்க வைக்க என்னால் முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன். என்னால் ஞாயிற்றுக்கிழமை உங்களை வேலைப்பார்க்க வைக்க முடியும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால், நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப் பார்க்கிறேன்.

    ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?. வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும். எவ்வளவு நேரம் மனைவி கணவனின் முகத்தை வெறித்து பார்க்க முடியும்? அலுவலகம் சென்று வேலையை தொடங்குங்கள்.

    சீன மக்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலைப் பார்க்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கு, தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவீத உயர்வு. தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார் என்று பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். 

    • உழவுத் தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
    • மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகை நேற்று உலகத் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    தை பொங்கலுக்கு மறுநாளாக இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    மக்கள் தங்கள் வாழ்வில் குடும்ப உறுப்பினர்களை போல் வாழும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மாட்டுப் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

     

    மாட்டுப் பொங்கலை ஒட்டி மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து விவசாயிகள், மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் மாடு மற்றும் ஆடு உள்ளிட்ட விலங்குகள் வளர்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் இன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். உழவுக்கு உயிரூட்டும் கால்நடைகளுக்கு இந்த நாளில் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் இருக்கும்.

    மேலும் உழவுக்கருவிகளுக்கும் பூஜை செய்வார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி, வழிபாடு நடத்தி, பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். இந்த பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் கிராமங்கள் அனைத்திலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    அதேநேரம் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    • சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் களம் இறங்கி மாடுகளை பிடிப்பார்கள்.
    • மொத்தம் 1000 மாடுகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படுகின்றன.

    பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1,100 காளைகள் சீறிப்பாய்ந்தன. 900 வீரர்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர்.

    இதில் வி.கே. சசிகலா காளைக்கு சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. வீரர்கள் உறுதி மொழி ஏற்று மாடுகளை பிடிக்ச் சென்றர். முதலாவதாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு காளைகளாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர்.

    வீரர்கள் அதிகாலை முதல் போட்டி நடைபெறும் இடத்தில் குவிந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு கட்ட மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகே வீரர்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவ பரிசோதனைக்கு வீரர்கள் முண்டியடித்து சென்றதால் தடுப்புகள் கீழே விழுந்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

    மருத்துவம பரிசோதனைக்குப் பிறகு வீரர்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அதிக மாடுகள் பிடிக்கப்பட்ட வீரர் இறுதிச் சுற்றுக்கு அனுமதிக்கப்படுவார். இறுதிச் சுற்று முடிவில் அதிக காளை பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும்.

    அதேபோல் காளைகளை உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் பாலமேடுக்கு அழைத்து வந்தனர். காளைக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு, அதன்பின் டோக்கன் வழங்கப்படும். டோக்கன் அடிப்படையில் காளைகள் அவிழ்த்துவிடப்படும்.

    • பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்! என்று பதிவிட்டு இருந்தார்.
    • பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் டாக்டர். மாளவிகா ஐயர் என்பவர், தமிழக அரசு வழங்கிய இலவச சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில், விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும்! என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், மாளவிகாவின் எக்ஸ் தள பக்கத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 



    • நான் 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தேன்.
    • அப்போது அமித் ஷா எங்கிருந்தார் என்பது எனக்குத் தெரியாது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசும்போது, 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சரத் பவாரின் துரோக அரசியல், 2024 மகாராஷ்டிர மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது எனக் கூறினார்.

    இந்த நிலையில் அமித் ஷாவின் விமர்சனத்திற்கு சரத் பவார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "நான் 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தேன். அப்போது அமித் ஷா எங்கிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. நான் முதல்வராக இருந்தபோது, ஜன சங்கத்தை சேர்ந்த உத்தமராவ் பாட்டீல் போன்றவர்கள் (பாஜக-வின் முன்னோடிகள்) என்னுடைய மந்திரி சபையில் இடம் பிடித்தனர். அரசியல் தலைவர்களிடையே முன்னதாக நல்ல தொடர்பு இருந்தது. தற்போது அது இல்லை" என்றார்.

    இதற்கு சான்றாக 2001-ம் ஆண்டு புஜ் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தான் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட, வாஜ்பாய் தன்னை பேரிடர் நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவராக்கினார் என சரத் பவார் தெரிவித்தார்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    முன்னேற்றம் ஏற்படும் நாள். அலுவலக பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள் அகலும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். நெடுநாளைய நண்பர் ஒருவரின் சந்திப்பு கிட்டும்.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். 

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும் நாள். வெளியூர் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

    ×