என் மலர்
TNLGanesh
About author
- பிரதீபா ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு பிரதீபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் நெல்லை புறநகர் மாவட்டம் மூலக்கரைப்பட்டி பேரூர் அ.தி.மு.க. நகர துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இவரது மகள் பிரதீபா (வயது 13). இவர் நெல்லை ஜவகர் நகரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந்தேதி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடந்த இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்த உள்ள தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கான தமிழக மாநில அளவிலான தெரிவு போட்டியில் பங்கேற்றார்.
அதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பிரதீபா, தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவி பிரதீபா, நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவியின் தந்தை காளிமுத்து உடன் இருந்தார்.
- மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
- மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. அணை பகுதிகளிலும் மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நெல்லை
நெல்லையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.
சேர்வலாறு அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 697 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.43 அடியாக உள்ளது. அணை பகுதிகளில் மழையால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 98 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கு 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 44.75 அடியாகவும், நம்பியாறு அணை 12.49 அடியாகவும் நீடிக்கிறது.
மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன், நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட்டுகளிலும் பரவலாக மழை பெய்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சிவகரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சங்கரன்கோவிலில் அதிகபட்சமாக 24 மில்லிமீட்டர் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், தென்காசி யில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணைகளை பொறுத்த வரை கடனா நதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- பொத்தை பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- இரவு நேரத்தில் தோப்பில் கரடி புகுந்து கரையான்களை திண்பது போன்ற வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
கடையம்:
கடையம் யூனியனுக்குட் பட்டது அடைச்சாணி ஊராட்சி. இக்கிராமத்தின் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு மலையான் குளம் கிராமத்தில் இருந்து விவசாயிகள் தினந்தோறும் சென்று வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள பொத்தை பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் பகல் நேரங்களில் பொத்தை பகுதியில் கரடிகள் அதிக மாக சுற்றி திரிவதால், இப்பகுதியின் வழியே விவசாயம் செய்ய, அடைச் சாணி வயல்வெளிகளுக்கு செல்ல மிகவும் அச்சமாக உள்ளதாக அப்பகுதி விவ சாயிகள் கருத்து தெரி வித்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள பென்சிகர் என்பவரின் தோப்பில், இரவு நேரத்தில் கரடி புகுந்து அங்குள்ள பிளாஸ்டிக் பொருள்களை சேதப் படுத்தியும், கரையான்களை திண்பது போன்ற வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
- நிகழ்ச்சியில் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
- விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் ஊக்கப்பரிசு வழங்கிய சிவபத்மநாதனுக்கு ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தென்காசி:
கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டியில் பி.கே. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 4-வது ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது.
கபடி போட்டி தொடக்கம்
இதில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி தலைவருமான ரவிச்சந்திரன், வெங்கடாம் பட்டி ஊராட்சி தலைவர் ஷாருகலா ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ஆவுடை கோமதி, மகேஸ்வரி சத்தியராஜ், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் அய்யன்சாமி, முகமது யாகூப், அன்பழகன், கடையம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட், கடையம் வடக்கு ஒன்றிய முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் செல்வன், தொண்டரணி தலைவர் வெங்கடேசன், சிறுபான்மை அணி ஆதம் சுபேர், உதயநிதி நற்பணி மன்றம் அசிம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியாசிங், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் தங்கச்செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால், வெய்க்காலிபட்டி கிளை செயலாளர் பால்ராஜ், நிர்வாகிகள் நவீன்கிருஷ்ணா, பால்ராஜ், ராஜாமணி, கோவில்பிள்ளை, ஜெயராஜ், ராபர்ட், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் கார்த்திக், சங்கர் ராம், பன்னீர், முத்து பாண்டி, பூதத்தான், வடமலைபட்டி ஆதிலிங்கம், சங்கர்ராம், மகாராஜா, சுமன், சிவசந்திரன், அருணாசலம், சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விளையாட்டு போட்டி நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற்றுத்தந்ததுடன், விளையாட்டு வீரர்களை ஊக்கப் படுத்தும் வகை யில் ஊக்கப்பரிசு வழங்கிய முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனுக்கு ஊர் பொதுமக்கள், விளையாட்டு குழுவினர் திரண்டு வரவேற்பு அளித்து, நன்றி தெரிவித்தனர்.
- சுரண்டை நகராட்சி பகுதியில் ஊரின் நடுவே, சென்னை கூவம் ஆற்றை போன்று செண்பக கால்வாய் உள்ளது.
- அணையில் இருந்து உபரி நீர் வரும்போது அதனுடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.
தென்காசி:
தமிழக நீர் வளம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சென்னையில் நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சுரண்டை நகராட்சி பகுதியில் ஊரின் நடுவே, சென்னை கூவம் ஆற்றை போன்று செண்பக கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் வழியாக அடவிநயினார் அணையில் இருந்து உபரி நீர் விவசாயத்திற்கு வரும்போது அதனுடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி அங்கு கான்கிரீட் தளம் அமைத்து தருவதற்கு தனியாக நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- காசி விஸ்வநாதன் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்துள்ளார்.
- மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதால் காசி விஸ்வநாதன் இறந்தது விசாரணையில் தெரியவந்தது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் பெருந்தலைவர் காமராஜர் தினசரி காய்கனி சந்தையின் கீழ்புறம் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையோரத்தில் மின் கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்து கிடப்பதாக அவ்வழியே சென்ற பொதுமக்கள் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த வாலிபர் கீழப்பாவூர் தேவர் வடக்கு தெருவை சேர்ந்த காசி விஸ்வநாதன் (வயது 38) என்பதும், சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் புது மார்க்கெட் அருகே வந்தபோது, மின் கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதி அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தொட்டியான்குளம் குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பூ உலகை காப்போம் மன்றத்தின் சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தொட்டியான்குளம் குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு பணியை தொடங்கி வைத்தார். இதில் ஆலங்குளம் யூனியன் முன்னாள் துணை சேர்மன் தங்கசெல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் மோகன் லால், ராஜதுரை, மாவட்ட பிரதிநிதி அன்பழகன், பூ உலகை காப்போம் மன்றத்தின் அங்கத்தி னர்கள், அசுரா அமைபின் பொறுப்பாளர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வ லர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பூ உலகை காப்போம் மன்றத்தின் தலைவர் ராஜா வரவேற்று பேசினார். ஆலோசகர் இளங்கோ, அசுரா மன்றத்தின் ராஜா, பிரபாகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சி க்கான ஏற்பாட்டி னை செய்திருந்தனர்.
- நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
- பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார்.
மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் பெரியதுரை முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, கிளை செயலாளர் எஸ்.பி. முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீரகுமார், ஒன்றிய பிரதிநிதி சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குட்டிராஜ், ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் மனோஜ்குமார், சின்னத்துரை, செந்தூர் பாண்டியன், வல்லரசு, யேசுதாஸ், மகேந்திரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒன்றிய நிர்வாகி கள், கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற உள்ள ஆண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்ற உள்ளார்.
- பூத் கமிட்டி ஆய்வுக்காக தலைமை நிலைய பொறுப்பா ளரை நியமனம் செய்து உள்ளனர்.
செங்கோட்டை:
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலு வலகத்தில் நடந்தது.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
அ.தி.மு.க.வின் ஆண்டு விழா தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு மகிழ்ச்சி திருவிழா. 52-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளை என அனைத்து பகுதிகளிலும் உள்ள அ.தி.மு.க. கொடி கம்பத்திற்கும் வண்ணம் பூசி கொடி ஏற்றி பொதுமக்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்க வேண்டும்.
அதேபோல அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சங்கரன்கோவில் தொகுதி யில் வருகிற 18-ந் தேதி ஜெயலலிதா திடலில் நடைபெற உள்ள ஆண்டு விழாவில் சிறப்புரையாற்ற உள்ளார். அவரை வரவேற்பதற்காக மாவட்டத்தின் 3 தொகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள், இளைஞர், மகளிரணியினர் தயாராக உள்ளனர்.
அதே போல் சங்கரன் கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் பிரசாதத்து டன் மகளிர் அணி நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கவும், 5 வகையான மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்படும். ஏற்கனவே நாம் செய்து வந்துள்ள பூத் கமிட்டி மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைத்து வரும் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும்.
பூத் கமிட்டி ஆய்வுக்காக தலைமை நிலைய பொறுப்பா ளரை நியமனம் செய்து உள்ளனர். பொறுப்பாளர் வரும் போது நம்முடைய மாவட்டத்தில் அனைத்து பூத் கமிட்டி பணிகளை முடித்து அவர் ஆய்வுக்காக வைத்திட வேண்டும். சங்கரன்கோவில் தொகுதிக்கு வருகை தரும் தென்காசி தனி மாவட்டம் தந்த எடப்பாடி பழனிசாமிக்கு தென்காசி மாவட்டத்தின் செயல்பாடு, சிறப்புகளை காட்டும் வண்ணம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வி.பி.மூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் சண்முகப்ரியா, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தலைமை நிலைய பேச்சாளர் தீக்கணல் லெட்சுமணன், அமுதா பாலசுப்பிரமணியன், சந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட கலெக்டர் தலைமையில் கல்லூரி களப்பயணம் தொடர்பாக முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள 53 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி ஆர்வமூட்டல் - கல்லூரி களப்பயணம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் முன் திட்டமிடல் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையில் , மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரி முதல்வர்கள், போக்குவரத்து துறை அலுவலர், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மைக் கருத்தாளர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு கல்வி பெல்லோஸ் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் செய்திருந்தார்.
- விவசாயிகள், மாணவ- மாணவிகள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
- தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை தாலுக்கா விற்குட்பட்ட பெரியகுளம் 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பெற்று மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
இந்த குளத்து கரையின் வழியாக கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்து கரை மட்டுமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. தென்காசியில் இருந்து இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் முழுவதும் இலத்தூர் குளத்துகரை வழியாகத் தான் வந்து செல்ல முடியும். ஏற்கனவே இலத்தூர் குளம் முதல் அச்சன்புதூர் வரையிலான வழி தடங்களில் தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் அதிகளவில் பாம்பு மற்றும் தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலத்தூர் குளத்து கரையை ஒட்டிய சாலையை விரிவுபடுத்தி தார்ச்சாலை அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது அந்த சாலையின் மைய பகுதியில் மேடு-பள்ளங்கள் காணப்படுகிறது. மேலும் ஜல்லிகள் பெயர்ந்தும் உள்ளது. சாலைகள் சேதம் மற்றும் தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இலத்தூர் கரையிலிருந்து அச்சன்புதூர் வரையிலான சாலையில் மின் விளக்கு அமைப்பதுடன், சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போட்டியில் 450-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று சைக்கிள் போட்டிகள் நடை பெற்றது. 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவி களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.
இதேபோல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ண யிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.
போட்டியினை ராஜா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிச ளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும். 3-வது பரிசாக ரூ.1,000 மற்றும் 4 முதல் 10-வது பரிசு வரை ரூ.250 வீதம் காசோலையாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.