என் மலர்
- இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 1 நாளுக்கு முன்னதாக நேற்றே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
- திடீர் மருத்துவ தேவைக்கு இந்த ரூ.1000 உரிமை தொகை மிகவும் உதவியாக இருக்கும்.
நெல்லை:
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 1 நாளுக்கு முன்னதாக நேற்றே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட இல்லத்தரசிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

சுதா (நெல்லை புதுப்பேட்டை)
நான் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை எனது வங்கி கணக்கில் நேற்றே வந்து சேர்ந்துவிட்டது. இதற்கான குறுந்தகவல் எனது போனுக்கு வந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த தொகை எனது மகன்களின் டியூசன் கட்டணத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மசாலா பொருட்கள் வாங்கி கொள்வேன். அரசுக்கு மிக்க நன்றி.

கவிதா (செங்கோட்டை)
எனது கணவர் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். ரூ.1000 உரிமைத்தொகை எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கணவர் தனி ஆளாக வேலைக்கு சென்று சிரமப்பட்டு வருகிறார். கியாஸ் சிலிண்டர் வாங்குவதற்கு இந்த தொகை எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த தொகை எனக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தி உள்ளது.

சண்முக சுந்தரி (செங்கோட்டை)
ரூ.1000 உரிமை தொகைக்காக முன்னோட்டமாக எனது வங்கி கணக்கில் 10 பைசா ஏற்றப்பட்ட குறுந்தகவல் வந்தது. இன்று முதல் தொடங்கப்படும் என அறிவித்த நிலையில் நேற்றே எனக்கு பணம் ஏறிவிட்டது. எனது கணவர் வெளியூரில் தங்கி பணிபுரிகிறார். 2 கைக்குழந்தைகளை வைத்து சிரமப்பட்டு வருகிறேன். திடீர் மருத்துவ தேவைக்கு இந்த ரூ.1000 உரிமை தொகை மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சாந்தா (நெல்லை சந்திப்பு)

அரசின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. இன்று முதல் தொடங்கும் என அறிவித்த நிலையில் நேற்றே எனது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு விட்டது. நான் இன்று காலையிலேயே அந்த தொகையில் ரூ.300-க்கு எனது போனுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டேன். இப்போது கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்க போகிறேன். மாதத்தில் 10 நாட்களுக்கு எங்கள் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வாங்க இது உதவியாக இருக்கும்.
ஜீவா (ஆலங்குளம்)

பெண்களுக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் அமைந்துள்ளது. மாதந்தோறும் சிறு சேமிப்பு தொகையாக இது உள்ளது. மாதந்தோறும் 5-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் பணத்தை பெற வங்கிக்கு அலைவதை தவிர்த்து அதற்கு எளிய வழிமுறை ஏதேனும் நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
செல்வி (கீழப்பாவூர்)

எனது கணவர் ஆட்டோ ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த கலைஞர் மகளிர் உதவித்தொகை கிடைத்ததனால் ஒரு மாதத்தில் 15 முதல் 20 நாட்கள் வரையில் தேவைப்படும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு இந்த தொகை மிகவும் உதவியாக இருக்கும்.
முனீஸ்வரி (தூத்துக்குடி திரேஸ்புரம்)

எனக்கு கலைஞரின் உரிமை தொகை கிடைக்க பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வீட்டின் சிறு சிறு அவசர தேவைகளுக்கு உதவிகரமாக இருக்கும் இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மேரி பிரான்சிஸ் (தூத்துக்குடி குரூஸ்புரம்)

மகனின் பராமரிப்பில் வீட்டில் இருந்து வரும் எனக்கு கலைஞரின் ரூ.1,000 உரிமை தொகை கிடைக்க பெற்றதால் சுய தேவைகளுக்கு பிறரை எதிர்பார்க்காமல் செலவு செய்ய உதவும் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்.
ராதா (தூத்துக்குடி ஆரோக்கியபுரம்)

இட்லி வியாபாரம் செய்யும் எனக்கு ரூ. 1,000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றேன். இதன் மூலம் எனது பேத்தியின் படிப்புக்கும், தினசரி செலவிற்கும் உதவி கரமாக இருக்கும்.
- வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பழுதான மின்சாதனங்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
- களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய தொடர் பாதுகாப்பு வகுப்புகளை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நடத்த வேண்டும்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
புகார்களுக்கு உடனடி நடவடிக்கை
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் காளிதாசன் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முடிந்தவுடன் மின் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை
மின்துறை அமைச்சர் உத்தரவின் படி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய பணிகளான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின் விநியோகம் வழங்கும் மின் பாதையில் உள்ள மின்கம்பங்கள், மின்சாதனங்கள், முறையாக தொடர் ஆய்வு மேற்கொண்டு பழுதான மின் கம்பங்கள், தாழ்வான மின்பாதைகள், பழுதான மின்சாதனங்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
விவசாய மின் இணைப்பில் சுயநிதி அடிப்படையில் விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் அளித்தால் உடனடியாக ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மின்வாரியத்திற்கு எந்த நிலையிலும் வருவாய் இழப்பீடு ஏற்படாமல் இருப்பதற்கு தொடர்ச்சியாக மின் இணைப்புகளை ஆய்வு செய்து மின்வாரிய விதிமுறை களுக்கு முரணாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவாய் இழப்பீட்டை தடுக்க வேண்டும்.
பணிகளை மேற்கொள்ளும் களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய தொடர் பாதுகாப்பு வகுப்புகளை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நடத்த வேண்டும். நகர்ப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987- ஐ தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
- சங்கரவடிவு களக்காடு அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கினார்.
- சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பெண்களை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஊச்சிகுளத்தை சேர்ந்தவர் சங்கரவடிவு (வயது 75). இவர் ஊச்சிகுளத்தில் இருந்து களக்காடு வந்த பஸ்சில் ஏறி, களக்காடு அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அவர் அணிந்திருந்த 2½ பவுன் எடையுள்ள தங்க செயினை மர்ம நபர்கள் பறித்தனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். இதைக்கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த மீனாட்சி என்ற பொண்ணுத்தாய் (30), தேவி (21), மீனா (25) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து சங்கர வடிவின் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. முத்துகருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி,
மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சி ராணி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசு ப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் வசந்தி, கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் ஆறுமுகம், செயலாளர் முத்துப்பாண்டி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், திருத்து சின்னத்துரை, ஜெயபாலன், வட்டச் செயலாளர்கள் பாறையடி மணி, பக்கீர் மைதீன், நத்தம் வெள்ளபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருக்காட்சி திரு விழா இன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.
- 10-ம் திருநாளில் சாமிதோப்பு சிவசந்திரனின் அய்யாவழி அருளிசை வழிபாடு நடைபெறுகிறது.
நெல்லை:
பாளை மார்க்கெட் செல்வ விநாயகர் கோவில் தெரு அய்யா வைகுண்ட சுவாமி தத்துவ தவ தர்மபதி யில் 76-வது திருக்காட்சி திரு விழா இன்று தொடங்கியது.
இவ்விழா இன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் திருவிழா வையொட்டி இன்று அதி காலையில் அய்யாவுக்கு பால் பணிவிடை, திருக்கொடி பட்டம் வீதி வலம் வந்து திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உகப்பெருக்கு பணிவிடை, சூரிய வாகனத்தில் அய்யா பவனி, ஊர் தர்மம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சி கள் நடை பெற்றது. 2-ம் நாள் திருநாளில் குமரி மாவட்டம் நாஞ்சில் அசோகன் சின்னத்தம்பி தலைமையிலான அய்யாவழி இசை பட்டிமன்றம் நடை பெறுகிறது. அதனை தொடர்ந்து 8-ம் திருநாளில் வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா பவனி வந்து கலி வேட்டையாடல் உகப் பெருக்கு பணிவிடை ஏக மகா சிறப்பு அன்ன தர்மம் ஆகியவை நடைபெறுகிறது .
10-ம் திருநாளில் குமரி மாவட்டம் சாமிதோப்பு சிவசந்திரனின் அய்யாவழி அருளிசை வழிபாடு நடைபெறுகிறது.
அதைதொடர்ந்து 11-ம் திருநாளில் குமரி மாவட்டம் சுண்டப்பற்றி விளை ஜெகநாதனின் அய்யா வழி வில்லிசை கச்சேரி ஆகியவை நடைபெறுகிறது.இவ் விழாவி ற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- தேசிய தரச்சான்று வழங்குவதற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடக்க உள்ளது.
- சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் செய்து வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தற்போது பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.வாக ராஜா வெற்றி பெற்றது முதல் சங்கரன்கோவில் மருத்துவ மனைக்கு தேவையான வசதி களை ஏற்படுத்தி தர வேண்டுமென அமைச்சர்கள், அதிகாரிகளிடம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
காசநோய் கண்டறியும் கருவி, ரூ. 9 கோடியில் மருத்துவ கட்டிடங்கள், தீவிர சிகிச்சை பிரிவு, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 500 படுக்கை வசதிகள் மற்றும் படுக்கை விரிப்புகள், நீர்த்தேக்கத் தொட்டி, ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சலவை கூடம், ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சலவை எந்திரம் மற்றும் சி.டி. ஸ்கேன் வசதி, அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருகிற 21, 22, 23-ந் தேதிகளில் தேசிய தரச்சான்றுவழங்குவதற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடக்க உள்ளது. இந்த ஆய்வை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு செய்து மருத்துவர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நடைபெற்று வரும் பணிகள், நடத்த முடிந்த பணிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ., பேசியதாவது:-
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும். அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைகளையும் பெறலாம்.
தற்போது சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தைராய்டு, குடலிறக்கம், கடுமையான எலும்பு முறிவு, மார்பக புற்றுநோய் கட்டி அகற்றல், ஹீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் செய்து வருகின்றனர். டான்சில் அறுவை சிகிச்சை என்பது மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் செய்யப்பட்டுள்ள நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 2 நோயாளி களுக்கு வெற்றிகரமாக தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது முழு குணமடைந்து உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்த சங்கரன்கோவில் மருத்து வமனை மருத்துவர்க ளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வின் போது தென்காசி மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், அரசு சங்கரன்கோ வில் மருத்துவமனை தலைமை குடிமை மருத்துவர் செந்தில் சேகர், தி.மு.க. மாணவரணி வீரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், வக்கீல் சதீஷ், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தென்காசி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
- செவ்வாழை ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய காய்கறி சந்தையாக பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் விளங்கி வருகிறது.
இந்த தினசரி சந்தைக்கு உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் வறட்சியின் காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
மேலும் போதிய தண்ணீர் இல்லாமல் வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், உள்ளூர் வரத்து இல்லாததால் வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் மற்றும் வாழை இலைகள் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வாழைத்தார்களில் ரோபஸ்டோ, நாடு, கோழிக்கூடு ஆகிய ரகங்களின் விலையானது ரூ.150 முதல் ரூ.300 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 2 மடங்காக விலை உயர்ந்துள்ளது. அதேபோன்று செவ்வாழை ஒரு கிலோ ரூ.40 முதல் 45 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.70 முதல் ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது. வாழை இலை கட்டுகளின் விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதன் விலை ஏற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
- கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தும் பயனாளிகளுக்கு கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அபராத வட்டி தள்ளுபடி
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 வரை கடன் உதவி பெற்ற தென்காசி மாவட்ட பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகை யினை செலுத்தும் பயனாளி களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலா ளர்களால் வழங்கப்படும்.
டிசம்பர் மாதம்
இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்படும். தாட்கோ, மாவட்ட மேலாளர்கள் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளபடி அசல் தொகையினை பயனாளிகளிடம் இருந்து வசூல் செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாசில்தார் அலுவலகம், 2-வது தளம், தென்காசி என்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலு வலகத் தொலைபேசி எண் 04633-214487 மற்றும் செல்போன் எண் 74488 28513 மூல மாக விவரம் பெற்று கொள்ள லாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான பருத்தி, மக்காச்சோளம் விதைகள் உள்ளது.
- பதிவுச்சான்று விதை உற்பத்தியாளரால் விண்ணப்பம் செய்து பெறப்படுகிறது.
தென்காசி:
நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான பருத்தி, மக்காச்சோளம் விதைகள் உள்ளது.
விதை விற்பனை நிலையங்களில் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் சான்று பராமரிக்கப்பட வேண்டும். அறிவிக்கை செய்யப்படாத அனைத்து பயிர் ரகங்களுக்கும் பதிவுச்சான்று, விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்குனரால் 3 ஆண்டுகளுக்கு அனுமதித்து வழங்கப்படுகிறது. மேற்படி பதிவுச்சான்று விதை உற்பத்தியாளரால் விண்ணப்பம் செய்து பெறப்படுகிறது.
விதை கட்டுப்பாட்டு சட்டம் 1983 பிரிவு 13(1)-ன்படி விதை விற்பனை நிலையங்களில் அறிவிக்கை செய்யப்படாத நெல், மக்காச்சோளம், காய்கனி உள்ளிட்ட அனைத்து பயிர் ரகங்களும் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் பரிசோதனை சான்று பெறப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்பட வேண்டும்.
மேற்படி அறிவுரைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966, விதைக்கட்டுப்பாட்டு சட்டம் 1983-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது.
- காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள், தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது.
சிவகிரி:
சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உள்ள கோம்பை ஆறு பீட்டிற்கும், சிவகிரி பீட்டிற்கும் இடையே வனப்பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகனுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன் உத்தரவின் பேரில் சிவகிரி ரேஞ்சர் மவுனிகா, வனவர்கள் அசோக்குமார், அசோக் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோம்பை ஆறு பீட் பகுதியிலும், சிவகிரி பீட் பகுதியிலும் முற்றிலுமாக அணைக்கப்பட்டதாகவும், காற்றின் வேகத்தில் இரண்டிற்கும் மேலே உள்ள உள்ளார் பீட்டில் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைப்பதற்கு வனத்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து இலை தழைகளை கொண்டு அணைத்து வருவதாகவும், இன்று வியாழக்கிழமை எரியும் தீயை முழுமையாக அணைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
காற்றின் வேகம் காரணமாக தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடினர். இந்நிலையில் இன்று அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் சிவகிரி அடிவாரப் பகுதிகளில் வேளாண்மை செய்யப்பட்டுள்ள பயிர்களில் சாம்பல்கள் படிந்து காணப்படுகிறது.
- கருவந்தா ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
- விழாவில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தென்காசி:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவந்தா ஊராட்சியில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.
ஊராட்சி தலைவர் தானியேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் மங்களம், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுடலைகண்ணன், அமிர்தம் ஜெயபாலன், மல்லிகா, பேச்சியம்மாள், மாரி செல்வி, மெர்லின், சத்யா பெரியசாமி, ஊராட்சி செயலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் ஜெய குளோரி, மக்கள் பணியாளர் விஜயராம், ஊராட்சி பணியாளர்கள் மாரியம்மாள் , சூரியமதி ராஜேஸ்வரி, அரசு ஒப்பந்தக்காரர் தானியேல் ஞானராஜா, பால்ராஜ், கருவந்தா மற்றும் ஊர் நாட்டாமைகள், விவே கானந்தா பள்ளி நிர்வாகி பால்ராஜ், தொழிலதிபர் யேசுதாஸன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கருவந்தா ஊராட்சி மன்ற தலைவர் தானியேல் சால்வை அணிவித்து வரவேற்றார்.
- கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 86 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 63 ஆயிரத்து 237 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி களை கலெக்டர் ரவிச்சந்தி ரன் வழங்கி பேசியதாவது:-
மகளிர் உரிமைத்தொகை
தென்காசி மாவட்டத்தில் மகளிர் உதவித்தொகை கோரி 3லட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அதை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது அதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேரின் மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது தென்காசி மாவட்டத்தை பொருத்த வரை 8 ஆயிரம் ஏ.டி.எம். அட்டைகள் வரப் பெற்றுள்ளன. தென்காசி ஐ.சி.ஐ. பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பயனா ளிகளுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்குகிறார்.
டெங்கு காய்ச்சல்
ஒவ்வொரு மாதமும் 15 -ந்தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இத்தொகை வரவு வைக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ., அனைத்து துறை அதிகாரி கள் மற்றும் ஒன்றிய சேர்மன் சுப்பம்மாள் பால் ராஜ், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, ஒன்றிய கவுன்சிலர் பகவதியப்பன், கொடிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் உடையார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக் களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.