என் மலர்
- நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகளின் எச்சரிக்கைக்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
- காற்றின் வேகத்தால் பேரிகார்டுகள் சாலையிலேயே விழுந்து கிடக்கிறது.
தென்காசி:
பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டை கடந்து தென்காசி செல்லும் சாலையில் செல்வவிநாயகர்புரம் உள்ளது. இங்கு அமைந்துள்ள தனியார் மருத்துவமனை அருகே நான்குவழிச்சாலை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதன் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகளின் எச்சரிக்கைக்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி செல்வ விநாயகர்புரம் பகுதியிலும் ஒருபுறம் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் மற்றொரு புறம் வழியாக வாகன ஓட்டிகள் செல்லும் வகையில் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்ப ட்டுள்ளது.
அந்த பேரிகார்டுகள் காற்றின் வேகத்தால் சாலையிலேயே விழுந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் நான்கு வழிச்சாலையில் அந்த பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது தெரியாமல் யாரேனும் மின்னல் வேகத்தில் வாகனங்களில் வந்தால், அவை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி பேரிகார்டுகளை கீழே விழாதவாறு அதன் கீழ் பகுதியில் மண் மூடை உள்ளிட்டவை வைத்து சாயாத வண்ணம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடங்கநேரி பஞ்சாயத்து ரெட்டியார் பட்டி கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் செல்லதுரை, அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், ஆலடி எழில்வானைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் குகன் வரவேற்று பேசினார்.
விழாவில் பள்ளியில் படிக்கும் 290 மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி பாலகுமார், ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், கிளை செயலாளர் கணேசன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
- இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 337 மனுக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3-மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 337 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசா ரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந் தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஷேக், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராம சுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
- 16 -வது வார்டு அம்பேத்கர் தெற்கு தெருவில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் இருப்பது தொடர்பாக புகார் வந்தது.
- முறையற்ற குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி பணியாளர்கள் துண்டித்தனர்.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் முறையற்ற மற்றும் பேரூராட்சி அனுமதி இல்லாத குடிநீர் இணைப்புகளை துண்டித்து முறைப்படுத்த சிவகிரி பேரூராட்சி மன்றத்தின் மூலமாக கடந்த மாதம் நடந்த மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் 16 -வது வார்டு அம்பேத்கர் தெற்கு தெருவில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் இருப்பது தொடர்பாக தொடர்ந்து புகார் வந்தது.
அதனைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு உத்தரவின்படி, சிவகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், பேரூராட்சி பணி யாளர்கள் ஆகியோர் காவல்துறை யினருடன் இணைந்து அந்த பகுதியில் இருந்த முறையற்ற குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு துண்டித்தனர்.
மேலும் வீடுகளில் முறையான அனுமதி இல்லாமல் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு சிவகிரி பேரூராட்சியில் முறையான அனுமதி பெற்று முறைப்படுத்த வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பித்து அனுமதி வாங்கி பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகிரி பேரூராட்சி அலுவலர்கள் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்யும்போது முறையான அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் இருப்பது தெரிய வந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு பொது மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
- மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது.
- கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., மாணவர்களை அழைத்து அவர்கள் கைகளால் அடிக்கல்லை நாட்டினார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி பண்பொழி சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது. அதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., கல்லூரி மாணவர்களை அழைத்து மாணவர்களின் கைகளால் அடிக்கல்லை நாட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் நகர செயலாளர் முருகன், முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா, நகராட்சி உதவி பொறியாளர் கண்ணன், தொழில்நுட்ப பிரிவு உதவியாளர் சுரேஷ், அரசு ஒப்பந்ததாரர் வேல் துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
- போட்டியில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
- சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்றார்.
சங்கரன்கோவில்:
தமிழக அரசு சார்பில் சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகள போட்டி ஆலமநாயக்கபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்தனர். மாணவர்கள் ஜூனியர் பிரிவில் சந்தன முத்து வைரவன், சீனியர் பிரிவில் பவேஷ், சூப்பர் சீனியர் பிரிவில் பிரகாஷ் ஆகிய 3 பிரிவிலும் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.
இதே போன்று பெண்கள் சூப்பர் சீனியர் பிரிவில் முத்துமலர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். வட்டார அளவில் சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.
- தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் தலைமையில் முருகன் என்பவருக்கும், வினிதா என்பவருக்கும் இலவச திருமணம் நடைபெற்றது.
- மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கோவில் சார்பாக வழங்கப்பட்டது.
தென்திருப்பேரை:
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மணமக்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலில் நேற்று தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவில் நிதி மூலம் நாங்குநேரி வட்டம் கீழ அரியகுளத்தை சேர்ந்த மணமகன் முருகன் என்பவருக்கும், ஆழ்வார்திருநகரி பத்தவாசலை சேர்ந்த மணமகள் வினிதா என்பவருக்கும் இலவச திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கோவில் சார்பாக வழங்கப்பட்டது.
- பள்ளி தாளாளர் ஆ.ஜெயா சண்முகம் தலைமையில் தாத்தா, பாட்டிகள் தினம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் கிருஷ்ண ஜெயந்தி விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மூன்றாம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஆ.ஜெயா சண்முகம் தலைமையில் தாத்தா, பாட்டிகள் தினம் நடை பெற்றது. ஆசிரியை இசக்கியம்மாள் வரவேற்று பேசினார். மாணவ- மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் வந்திருந்து பேரக்குழந்தைகளை பூக்களை தூவி ஆசீர்வாதம் செய்த னர். மாணவ- மாணவிகளின் சிறப்புரை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 'தாத்தா பாட்டிகள்' தினத்தை பற்றி ஆசிரியை உதயம்மாள் சிறப்புரையாற்றினார். கிருஷ்ண ஜெயந்தி விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளும் வழங்கப் பட்டது. பழைய பாடல்களுக்கு தாத்தா, பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளுடன் ஆடி மகிழ்ந்தனர். ஆசிரியை நாகேஸ்வரி நன்றி கூறினார்.
- குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர்.
- ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து படிப்படியாக குறைந்து சுமார் 2 மாதங்களில் ஒரு கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
உடன்குடி,:
உடன்குடி வட்டார பகுதி என்பது 17 கிராம ஊராட்சியும், ஒரு பேரூராட்சியும் அடங்கிய பகுதியாகும். மெஞ்ஞான புரம், பரமன்குறிச்சி, லட்சுமிபுரம், குலசே கரன்பட்டினம், மணப்பாடு, செட்டியாபத்து, தண்டுபத்து போன்ற பெரும் ஊரை அடக்கிய பகுதியாகும்.
இங்கு பல்வேறு விவசாயம் முன்பு நடந்தது. தற்போது பனை, தென்னை, முருங்கை ஆகிய 3 விவசாயம் மட்டுமே மும்முரமாக நடந்து வருகிறது.
குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர். திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் மும்முரமாக நடந்தது.
முருங்கையும் கொத்து கொத்தாக காய்க்கிறது. ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து படிப்படியாக குறைந்து சுமார் 2 மாதங்களில் ஒரு கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இருந்தாலும் விவசாயிகள் தவறாமல் முருங்கைக்காய் பறித்து கொண்டு வந்து கமிஷன் கடையில் குவித்தனர்.
தற்போது மேலும் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.4-க்கு கொள்முதல் செய்கின்ற னர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை என்று கொண்டு குவிப்பதால், வியாபாரிகள் இதை வாங்கி, மதுரை, திருச்சி, விருதுநகர், சென்னை, கோவை போன்ற பெரும் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
உற்பத்தி செலவு கூட கட்டுபடியாகவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். முருங்கைகாயை பார்சல் போடுவது, ஏற்று கூலி, வாகனங்களில் கொண்டு செல்வது, இறக்கு கூலி, விற்பனை கமிஷன் என கணக்கு போட்டு வெளியூர்களில் விற்பனை செய்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
- பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ராஜா எம்.எல்.ஏ.கேட்டறிந்தார்.
- முகாமில் பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிப்புள்ள நபர்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன் கோவிலில் உள்ள 36 கிராம சேனை தலைவர் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ராஜா எம்.எல்.ஏ.
தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மருத்துவரணி தலைவர் சுமதி முன்னிலை வகித்தார்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
முகாமில் பொது மக்களுக்கு சர்க்கரை நோய், பொது மருத்துவம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய்கள், முதுகு வலி, மூட்டு தேய்மானம், மகளிர் நல ஆலோசனை உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிப்புள்ள நபர்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப் பட்டது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், , மாவட்ட விவசாய அணி தலைவர் வெள்ளைத்துரை, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், மருத்துவரணி துணை தலைவர் பேச்சியம்மாள், துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வீமராஜ்,
வக்கீல்கள் நேரு, ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவாஜி, கணேஷ், மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி முத்தமிழ், ஜெயகுமார், ஜான் மருத்துவர்கள் மணிகண்டன், சுமதி, சத்தியபாலன், செல்வமாரி, பேச்சியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
- மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கோவில் வளாகத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் ஒரு பகுதியில் மாணவர்கள் படிக்க மாலை நேர படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.
அன்னதானம்
இக்கோவிலில் தமிழ் மாத கடைசி வெள்ளி, பவுர்ணமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில் காலையில் சிற்றுண்டி, மதியம் அன்னதானமும் மற்ற நாட்களில் மதியம் அன்ன தானமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கோவில் வளாகத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ், ராணுவம், தீயணைப்பு துறை, ரெயில்வே போன்ற சீருடை பணியாளர் தேர்வுக்கான உடல் திறன் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில், விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்று வட்டார கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்த மைதானத்தில் உடல் திறனை மேம்படுத்து வகையில், நீளம் தாண்டுதல் மைதானம் மற்றும் கயிறு ஏறும் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ளன.
மாலை நேர படிப்பகம்
இந்நிலையில் இக்கோவிலின் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலை புரத்தில் உள்ள அவர்களது குடும்ப வீட்டில் ஒரு பகுதியில் மாணவர்கள் படிக்க மாலை நேர படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஊர் இளைஞர்களுக்காக விளை யாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. திருச்செந்தூர் தாசில்தார் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் ஆவுடையானூர் மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில் ஸ்ரீவை குண்டம் துணை தாசில்தார் அய்யனார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, எல்.ஐ.சி. தமிழ்செல்வன், சென்னை திருமலைக்குமார் மற்றும் முத்துமாலைபுரம் ஊர் பொதுமக்கள், மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவ-மாணவிகளின் சிலம்பம் நிகழ்ச்சி நடந்தது. மாஸ்டர்கள் சிலம்பம் பாப்பையா, கணபதி ஆகியோர் கலந்து கொண்டு சிலம்பம், களறி ஆடினார்கள். முடிவில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பக ராமன் நன்றி கூறினார்.
- ஏ.டி.எம். மையத்தின் முகப்பில் வாறுகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
- வயதானவர்கள் செல்லும்போது கால் தவறி கீழே விழும் நிலை நீடித்து வருகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தின் கீழ் புறத்தில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை ஓரம் இயங்கி வரும் எஸ்.பி.ஐ. வங்கியின் சார்பில் அதன் அருகே ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏ.டி.எம். மையத்தின் முகப்பு பகுதியில் வாறுகால் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று முடிவு பெறாமல் இருக்கும் நிலையில் ஏ.டி.எம். மையத்திற்கு வாடிக்கை யாளர்கள் செல்வதற்காக மரத்தால் ஆன நடைமேடை அமைக்கப்ப ட்டுள்ளது. நடைமேடையும் தற்போது உடைந்து ஆபத்தான நிலையில் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் காட்சியளிக்கிறது. வயதானவர்கள் அதன் வழியே ஏறி செல்லும் பொழுது கால் தவறி கீழே விழும் நிலை நீடித்து வருகிறது. எனவே வாடிக்கை யாளரின் நலன் கருதி தரமான நடை மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.