search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பகுதியில் முருங்கைக்காய் விலை மீண்டும் சரிவு - ஒரு கிலோ ரூ.4-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலை
    X

    உடன்குடி பகுதியில் முருங்கைக்காய் விலை மீண்டும் சரிவு - ஒரு கிலோ ரூ.4-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலை

    • குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர்.
    • ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து படிப்படியாக குறைந்து சுமார் 2 மாதங்களில் ஒரு கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    உடன்குடி,:

    உடன்குடி வட்டார பகுதி என்பது 17 கிராம ஊராட்சியும், ஒரு பேரூராட்சியும் அடங்கிய பகுதியாகும். மெஞ்ஞான புரம், பரமன்குறிச்சி, லட்சுமிபுரம், குலசே கரன்பட்டினம், மணப்பாடு, செட்டியாபத்து, தண்டுபத்து போன்ற பெரும் ஊரை அடக்கிய பகுதியாகும்.

    இங்கு பல்வேறு விவசாயம் முன்பு நடந்தது. தற்போது பனை, தென்னை, முருங்கை ஆகிய 3 விவசாயம் மட்டுமே மும்முரமாக நடந்து வருகிறது.

    குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர். திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் மும்முரமாக நடந்தது.

    முருங்கையும் கொத்து கொத்தாக காய்க்கிறது. ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து படிப்படியாக குறைந்து சுமார் 2 மாதங்களில் ஒரு கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இருந்தாலும் விவசாயிகள் தவறாமல் முருங்கைக்காய் பறித்து கொண்டு வந்து கமிஷன் கடையில் குவித்தனர்.

    தற்போது மேலும் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.4-க்கு கொள்முதல் செய்கின்ற னர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை என்று கொண்டு குவிப்பதால், வியாபாரிகள் இதை வாங்கி, மதுரை, திருச்சி, விருதுநகர், சென்னை, கோவை போன்ற பெரும் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    உற்பத்தி செலவு கூட கட்டுபடியாகவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். முருங்கைகாயை பார்சல் போடுவது, ஏற்று கூலி, வாகனங்களில் கொண்டு செல்வது, இறக்கு கூலி, விற்பனை கமிஷன் என கணக்கு போட்டு வெளியூர்களில் விற்பனை செய்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    Next Story
    ×