என் மலர்
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- ஒருவருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி ஊக்கத்தொகை விழாவில் வழங்கப்பட உள்ளது.
ஆலங்குளம்:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக நாளை அவர் ஆலங்குளம் வழியாக குற்றாலம் வருகிறார். இதையொட்டி ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு வைத்து காமராஜர் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை யிட்டு மரியாதை செலுத்து கிறார். தொடர்ந்து ஆலங்குளம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த சுமார் 557 இள ஞர்களுக்கு விளையாட்டு உப கரண ங்களை அவர் வழங்குகிறார்.
அதனைத்தொடர்ந்து தென்காசி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடை பெறும் ஆய்வு கூட்ட த்தில் கலந்து கொள்கிறார். மாலை 4 மணிக்கு தெ ன்காசி இசக்கி மஹாலில் தி.மு.க. இளை ஞரணி சார்பில் நடை பெறும் ஆலோசனை கூட்ட த்தில் கலந்து கொண்டு உரை யாற்றுகிறார். தொடர்ந்து கட்சியின் மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் அவர் கலந்து கொள்கிறார். ஒருவருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. தொ டர்ந்து அதே வளாகத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி ஆலோ சனை கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு முதல் முறையாக வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கனரக லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுகள் மறை முகமாக கொட்டப்பட்டு வருகின்றன.
- கழிவுகள் மீது தீ வைப்பதால் அருகில் இருக்கும் தென்னை மரங்கள் கருகி உள்ளன.
தென்காசி:
பாவூர்சத்திரம் அடுத்து உள்ள பெத்த நாடார்பட்டி கிராமத்தில் இருந்து செல்லதாயார்புரம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரம் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மர்ம நபர்கள் டன் கணக்கில் கொட்டி சென்றுள்ளனர்.
விவசாயிகளுக்கு தெரியாமல் இரவில் கனரக லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுகள் மறை முகமாக கொட்டப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி கழிவுகள் மீது அவ்வப்போது தீ வைத்து எரித்து விடுகின்றனர்.
இதனால் அருகில் இருக்கும் தென்னை மரங்கள் கருகி உள்ளன. பொதுமக்களுக்கும் சுவாச கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே பெத்தநாடார்பட்டி அருகே விவசாய நிலத்தின் அருகே டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள கேரள கழிவுகளை உடனடியாக அகற்றவும், அதனை தமிழக பகுதியில் கொட்டி வரும் கனரக லாரி ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனராக நிகர் ஷாஜி இருக்கிறார்.
- விஞ்ஞானி நிகார்ஷாஜியின் சகோதரர் சேக் சலீமுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
செங்கோட்டை:
ஆதித்யா எல்-1 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான் நபி பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த நிகர் ஷாஜி இருக்கிறார். அவரை பாராட்டி, இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சுலைமான் நபி பள்ளிவாசல் வாசலில் ஜமாத் சார்பில் பள்ளி பேஷிமாம் செய்யது சுல்தான் பைஜி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
பின்னர் விஞ்ஞானி நிகார்ஷாஜியின் சகோதரர் சேக் சலீமுக்கு ஜமாத்தின் சார்பில் ஜமாத்தலைவர் செய்யது பட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். தொடர்ந்து குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விஞ்ஞானி நிகார்ஷாஜி சகோதரர் சேக்சலீம், ஜமாத் தலைவர் செய்யதுபட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.
- மின் தடை அறிவிப்பால் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- மின்தடை ரத்து செய்த விபரத்தை முறையாக பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை.
புளியங்குடி:
புளியங்குடி பகுதியில் நேற்று (2-ந்தேதி) மின்வினியோகம் ரத்து செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி தொழிற் கூடங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும் மின்தடைக்கு ஏற்ப தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொண்டனர். மேலும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று புளியங்குடி பகுதியில் மின் தடை செய்யப்படவில்லை. இதனால் தொழிலாளிகளுக்கு விடுமுறை அளித்திருந்த தொழிற் கூடங்கள், தங்களது பணிகளை மாற்றி அமைத்திருந்த தொழிலாளிகள், விவசாய நிலத்தில் நீர் பாசனத்தை மாற்றி அமைத்து இருந்த விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் குழப்பத்திற்கு ஆளா னார்கள். மின்தடை குறித்து அறிவிப்பு வெளியிட்ட மின்வாரியம், அதனை ரத்து செய்த விபரத்தை முறையாக பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு சில தொழிற்கூடங்களுக்கும் தொழிலாளிகளுக்கு மட்டும் மின் தடை இல்லை என்ற தகவலை தெரியப்படுத்தி மின்வாரிய ஊழியர்கள் பாரபட்சம் காட்டியுள்ளதாக பெரும்பாலானோர் புகார் கூறினர்.
இதேபோல் இதற்கு முன்பும் மின்வாரியத்தின் மின்தடை அறிவிப்பில் குளறுபடி நடந்துள்ளது. மின்தடை அறிவிப்பு வெளியிடுவதும், பின்னர்
ரத்து செய்வதும் புளிய ங்குடி பகுதியில் வாடி க்கையான ஒன்றாகி விட்டது. எனவே இனிவரும் நாட்களில் மின்தடை குறித்து அறிவிக்கும் முன்னரே, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் நிர்வாக காரணங்களை ஆராய்ந்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 2 வருடங்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது நடைபெற்று வருகிறது.
- கொடி அணி வகுப்பில் 45 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 103 போலீசார் பங்கேற்றனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கடந்த 2 வருடங்களாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமானது நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக செங்கோட்டை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், தமிழக போலீசாரும் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த கொடி அணி வகுப்பில் 45 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 103 போலீசார் பங்கேற்றனர். செங்கோட்டை நகர பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் வீரர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி கொடி அணி வகுப்பை நடத்தினர்.
- நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இடது புற பகுதியில், போக்குவரத்து தடைபடாமல் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
- தென்காசி செல்லும் இடதுபக்க பகுதியில் இரு வழிக்கான பாலம் முழுமையாக தொடங்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது.
தென்காசி:
நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை திட்டமானது ரூ. 430.71 கோடிகள் மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்ப டுகிறது.
ரெயில்வே மேம்பாலம்
போக்குவரத்து அதிகம் நெருக்கடி கொண்ட பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் மேம்பால பணிகள் தொடங்கி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் 900 மீட்டர் நீளமும் 20மீட்டர் அகலமும் கொண்டது. இடது புறம் 22 பில்லர்களும், வலது புறம் 22 பில்லர்களும் சேர்ந்து மொத்தம் 44 பில்லர்களுடன் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.
தற்போது நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இடது புற பகுதியில், போக்குவரத்து தடை படாமல் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தண்டவாளத்திற்கு கிழக்கு பகுதியில் 13 பில்லர்களும், மேற்கு பகுதியில் 9 பில்லர்களும் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை
தென்காசி செல்லும் இடதுபக்க பகுதியில் இரு வழிக்கான பாலம் முழுமை யாக தொடங்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. தூண்களுக்கான அடித்தளம் அமைத்து, வட்ட வடிவிலான பில்லர் கான்கிரீட் மீது பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
பொதுவாக தண்ட வாளத்திற்கு மேலே அமைய இருக்கும் பால பகுதிகளை ரெயில்வேதுறை செய்து வந்த நிலையில் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையே செய்து வருகிறது.
வரைபடம்
இது குறித்து குறும்பலா பேரியை சார்ந்த ராஜசேகர பாண்டியன் என்பவர் எழுத்து பூர்வமாக கேட்ட கேள்விக்கு நெடுஞ்சாலைதுறை அளித்த பதிலில், "பாவூர்சத்திரத்தில் அமைக்கப்படும் ரெயில்வே மேம்பாலத்தின் ரெயில்வே பகுதிக்கான வரைபடம், மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் ரெயில்வே பகுதியில் வேலை தொடங்கப்படும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது."
இது குறித்து ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:- ரெயில்வே துறையின் அலட்சியம் காரணமாக பல்வேறு இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் தண்டவாளத்திற்கு மேற்பகுதியில் அந்தரத்தில் தொங்குகின்றன. பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலத்தை பொறுத்த வரை ரெயில்வே துறைக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் போதிய புரிந்துணர்வு, ஒருங்கி ணைப்பு இல்லை.
வாகனங்கள் அணிவகுப்பு
தற்போது ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் ரெயில்வே கேட் அதிக முறை மூடப்படுவதோடு, வாகனங்கள் இருபுறமும் கிலோ மீட்டர் கணக்கில் அணிவகுத்து நிற்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா இதுகுறித்து கூறுகையில், சென்னையில் உள்ள ரெயில்வே முதன்மை பால பொறியாளரிடம், மதுரை ரெயில்வே கோட்ட பொறியாளரிடமும் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால வரைபட அனுமதியை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் வரைபடங்களை வழங்காமலும் போதிய கால அவகாசம் தராததாலும் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாங்கள் கேட்கும் கூடுதல் தகவல்களையும் உடனடியாக வழங்கினால் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்றனர்.
எனவே தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக ரெயில்வே துறைக்கு பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால வரைபடம் சம்பந்தமான போதுமான தகவல்களையும் கொடுத்து குறித்த நேரத்தில் ஒருங்கி ணைப்பு செய்து பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலனியில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
கடையம்:
கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலனியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகுதி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை தாங்கினார். மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாநில அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இறகு பந்து போட்டியில் முகிலன், அனுசரா, ஸ்ரீவர்ஷினி போன்றவர்கள் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றனர்.
- வாலிபால் போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி அணியினர் தங்கபதக்கம் பெற்றனர்.
தென்காசி:
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியினை சி.பி.எஸ்.இ. பள்ளிகளும், மதுரை சகோதயா அமைப்பும் இணைந்து நடத்தியது.
இதில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் கால்பந்து, வாலிபால், இறகுபந்து, செஸ் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்கபதக்கம், வெள்ளிபதக்கம் பெற்றனர்.12 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் தங்கப் பதக்கமும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் வெள்ளிபதக்கமும் பெற்றனர்.
இறகு பந்து போட்டியில் முகிலன், அனுசரா, ஸ்ரீவர்ஷினி போன்றவர்கள் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றனர். வாலிபால் போட்டியில் 12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வெள்ளி பதக்கமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி அணியினர் தங்கபதக்கமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி சேர்மன் இசக்கி சுப்பையா, மேலாளர் இசக்கித்துரை, பள்ளி முதல்வர் மோனிகா டீசோசா, துணைமுதல்வர் ஜெயாக்கியா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டீபன் தங்கராஜ், சோபியா, சேவியர், பரலோகராஜா ஆகியோர் பாராட்டினர்.
- காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடந்தது. சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்-அமைச்சர் உத்தர விட்டதற்கும், இந்தியாவி லேயே முன்மாதிரி திட்டமாக மாணவ, மாணவிகள் கல்வி தரத்தில் உயர வேண்டும் என்ற மேலான எண்ணத்தில் வரலாற்று சாதனை திட்டமான காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்த தற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகராட்சி துணைத்தலைவர், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம்அருகே கீழ வீரானத்தில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஷேக் முகமது ஆகியோர் நிதியில் இருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் சேக் முகமது, தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் அப்துல்லா, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மாணவர் அணி ரமேஷ், இளைஞர் அணி மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணம்மாள், வெங்கடேஷ், பழனி, வள்ளியம்மாள், முருகேசன், கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கீழப்பாவூர் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பலசரக்கு கடை நடத்தி வந்த ஜோசப் என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தென்காசி:
பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதா? என பாவூர்சத்திரம் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கீழப்பாவூர் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கீழப்பாவூர் பால்பண்ணை தெருவில் பலசரக்கு கடை நடத்தி வந்த குறும்பலாபேரி பூபாலசமுத்திரம் தெருவை சேர்ந்த ஜோசப் (வயது 73) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரிடம் இருந்து ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான 874 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
- ஒருமித்த கருத்துகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலை மையில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரிய சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்துகொண்டு பேசியதாவது:-
அனைத்து தரப்பினரின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது. செய்த சாதனைகள் ஏராளம். இதை அனைத்து தரப்பினர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். ஒருமித்த கருத்துகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்க ப்பட்டு உள்ளது. அந்த கூட்டணி அமைவதற்கு காரணமாக இருந்த நமது முதல்- அமைச்ச ரை, பா. ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியும் தேவையி ல்லாத கருத்துக்களை எல்லாம் கூறி வருகின்றனர். என வே பாராளுமன்ற தேர்த லில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் வரை அனைவரும் தீவிர மாக பணியாற்ற வேண்டும்.
உதயநிதிக்கு வரவேற்பு
வருகிற 4-ந்தேதி (திங்கட்கி ழமை) தூத்துக்குடி மாவட்ட த்திற்கு வருகை தரும் மாநில இளைஞர் அணி செயலா ளரும், விளையாட்டு மேம்பா ட்டுத்துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதில் அனைத்து அணியை சார்ந்த நிர்வாகி களும், ஒன்றிய,நகர,பேரூர் கிளை வட்டச்செயலாளர்கள் அதிக அளவில் கலந்து கொ ள்வது மட்டுமின்றி, இளைஞர் அணியி னர் ஒவ்வொரு பகுதி யில் இருந்து அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறு முகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்தி ரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பி னர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பி னர் ராதா கிருஷ்ணன், கோவி ல்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செய லாளர்கள், முருகேசன், சின்னப்பாண்டியன், ராதா கிருஷ்ணன், காசிவி ஸ்வநாதன், மாவட்ட அணி அமைப்பா ளர்கள் அந்தோணி ஸ்டாலின், மதியழகன், அன்பழகன், குபேர் இளம்பரிதி, வக்கீல் பால குருசாமி, துணை அமைப்பா ளர்கள் பிரதீப், நாகராஜன், ஜோசப் அமல்ராஜ், பிரபு, அந்தோணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி கள் சேர்ம பாண்டி யன், செந்தில்குமார், நாரா யணன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர் மற்றும் கருணா, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.