search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • தீபாவளி கொண்டாட்டத்தில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.
      • பள்ளி தாளாளர், முதல்வர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.

      தென்காசி:

      செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் மழலையர் பிரிவு மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.

      விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பட்டாசு வெடித்தும், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கூறினர். மேலும் மணவ, மாணவிகளை பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட அறிவுறுத்தினர். ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனுசியா செய்திருந்தார்.

      • நிகழ்ச்சியில் பேராசிரியர் வில்லியம் தர்மராஜா கலந்து கொண்டு பேசினார்.
      • விழாவில் மாணவ-மாணவிகள் 194 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

      தென்காசி:

      கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை தலைவரும், கல்லூரி வளர்ச்சி கழக இயக்குநருமான பேராசிரியர் வில்லியம் தர்மராஜா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

      தொடர்ந்து கல்லூரியில் (2018-2020, 2019 -2021, 2020-2022) -ம் கல்வியாண்டில் பயின்ற மாணவ-மாணவிகள் 194 பேருக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரித் தலைவரும், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயருமான எஸ். அந்தோணிசாமி விழாவிற்கு முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். கல்லூரி செயலர் சகாயஜான் பட்டமளிப்பு விழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மேரி ரபேலின் கிளாரட் வரவேற்புரை ஆற்றி ஆண்டறிக்கை யை வாசித்தார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

      • மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆடை அலங்கார அணிவகுப்பினை நடத்தினர்.
      • 6, 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் குழு நடனமும் அரங்கேற்றப்பட்டது.

      தென்காசி:

      இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. மாணவி ஹர்ஷிதா ஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி ஆஹிலா வரவேற்று பேசினார். இதில் மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து உபயோகமற்ற காகிதங்களை மறுசுழற்சி செய்யும் விதமாக பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆடை அலங்கார அணிவகுப்பினை நடத்தினர். மாணவி காளிபிரியா பரதநாட்டியம் ஆடினார். 6, 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் குழு நடனமும் அரங்கேற்றப்பட்டது.

      9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் குழுவாக இணைந்து கிருஷ்ண பெருமான், பூமாதேவியர் நரகாசுரனை வதம் செய்த நிகழ்ச்சியை நாடகமாக நடித்து காட்டினர். சுற்றுச்சூழல் மாசு இல்லாத தீபாவளி பண்டிகை கொண்டாடும் முறையை பற்றி பிளஸ்-1 மாணவர்கள் மவுன நாடகம் நடித்து காட்டினர். முடிவில் மாணவி ஸ்ரீனிகா நன்றி கூறினார்.

      ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

      • மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி அய்யாத்துரை பாண்டியன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.
      • நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள விண்மின் இல்லத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி, உணவு பரிமாறி குழந்தைகளோடு இணைந்து தீபாவளியை அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உற்சாகமாக கொண்டாடினார்.

      நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், குருவிகளும் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, கோவிந்தன், தேவர்குளம் கிளை செயலாளர் சண்முகசுந்தரம், களப்பாகுளம் பசும்பொன், களப்பாகுளம் கிளை செயலாளர் முருகன், எழில் நகர் கிளை செயலாளர் பாபு கதிரேசன், என்.ஜி.ஓ. காலனி கிளை செயலாளர் ராஜா, இருமன்குளம் பசும்பொன், சங்கரன்கோவில் காங்கேயன் என்ற கார்த்தி, இளைஞர் அணி பட்டு ராஜா, கார்த்திக் தங்கமுத்து, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், ஞானசேகரன், மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

      • நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அரிசி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
      • சிறப்பு விருந்தினராக கே.ஆர்.பி. இளங்கோ கலந்து கொண்டு கண்தான விழிப்புணர்வு குறித்து பேசினார்.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் பொருளாளருமாகிய சினேகா பாரதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

      இதில் பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர் குழு நிறுவனரும், ஆலமர வட்டார தலைவருமாகிய கே.ஆர்.பி. இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட பொருட்களை வழங்கி கண்தான விழிப்புணர்வு குறித்து பேசினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் ஜேக்கப் சுமன் வாழ்த்தி பேசினார். முடிவில் ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளர் சுனில்குமார் நன்றி கூறினார்.

      • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கி பேசினார்.
      • நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவிலில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

      நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி வரவேற்று பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கி பேசினார்.

      இதில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் செல்வி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி பாண்டியன், தேவதாஸ், சாகுல் ஹமீது, மாரிசாமி, பராசக்தி, மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பொன் முத்தையா பாண்டி யன், கடற்கரை, பூசைப் பாண்டியன், சேர்மத்துரை, கிறிஸ்டோபர், வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன் மதிமாரி முத்து,

      நகரசெயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பேரூர் செயலாளர் குருசாமி, ரூபி பாலசுப்ரமணியன், மாரிமுத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், வருவாய் துறையினர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்கரன்கோ வில் தாசில்தார் பாபு நன்றி கூறினார்.

      • சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 18-ந் தேதி மற்றும் 28-ந் தேதி ஆய்க்குடியில் நடைபெறுகிறது.
      • முகாமில் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் உரிய ஆவணங்களுடன் பங்கு பெறலாம்.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

      தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 18-ந் தேதி மற்றும் 28-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆய்க்குடி ஜே.பி.பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

      அனைத்து கலை, பட்டய பொறியியல், மருத்துவம் உள்பட அரசு அங்கீகாரம் பெற்ற 3 ஆண்டிற்கு மேற் பட்ட அனைத்து கல்லூரி படிப்பிற்கான கல்வி கடனை எதிர்நோக்கி காத்தி ருக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், வாக்கா ளர் அடையாள அட்டை நகல், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 3, பான்கார்டு நகல், 10,11,12-ம் வகுப்பு மற்றும் தற்போது படித்துக் கொண்டு இருக்கும் மதிப்பெண் சான்றிதழ் நகல், சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.

      மேலும் பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று நகல், சாதி சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், கல்லூரி கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட (கவுன்சிலிங் சான்று) சேர்க்கைக்கான ஆவண நகல் கல்லூரி சேர்க்கை கடித நகல், கல்லூரி கட்டண விபரங்களுக்கான சான்று நகல் கல்லூரியின் அப்ரூவல் சான்று நகல் மற்றும் கல்வி கடன் பெறும் வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண், பாஸ்புக் நகலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து பயன் பெறலாம்.

      தென்காசி மாவட்ட அனைத்து வங்கி ஒருங்கி ணைப்பாளர்களும் தங்கள் கிளைகளில் பரிசீல னையில் உள்ள கல்வி கடன் விண்ணப்பத்தினையும் மற்றும் 28-ந் தேதி வரை நடைபெறும் கல்வி கடன் முகாமில் பெறப்படும் அனைத்து கல்வி கடன் விண்ணப்பத்தினையும் பரிசீலனை செய்து தென்காசி மாவட்ட கல்வி கடன் இலக்கினை அடைய வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • தீபாவளி பண்டிகை கொண்டாடப் படும் விதம் குறித்து மாணவி ஜெய் ஸ்ரீ விளக்கி கூறினார்.
      • நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளி யில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

      மாணவி வைஷ்ணவி வரவேற்றார். தீபாவளி பண்டிகை கொண்டாடப் படும் விதம் குறித்தும், பட்டாசு வெடிக்கும் விதிமுறை குறித்தும் மாணவி ஜெய் ஸ்ரீ விளக்கி கூறினார்.

      தீபாவளி உருவான வரலாறு குறித்து 10-ம் வகுப்பு மாணவி பொன் கீர்த்தனா மாணவர்களுக்கு எடுத்து கூறினார். மாணவி சுதர்ஷினி தீபாவளி குறித்து ஆங்கிலத்தில் உரை ஆற்றினார். மாணவி ஸ்ரீ பவித்தா நன்றி கூறினார். மாணவ - மாணவிகள் தாங்கள் கொண்டு வந்த இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

      ஆசிரியர்களுக்கு இனிப்பு மற்றும் போனஸ் பள்ளி நிர்வாகம் சார்பில் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை நித்தியா தினகரன் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

      • கூட்டத்தில் தலைமை கணக்காளர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.
      • சாலைகள் சீரமைக்கும் பணி, கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

      சுரண்டை:

      சுரண்டை நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கரா தேவி முருகேசன், கமிஷனர் ரவிச்சந்திரன் (பொறுப்பு),பொறியாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கணக்காளர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.

      கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுரண்டை செண்பக கால்வாயை சீரமைக்க வேண்டும், இரவு நேரங்களில் செண்பக கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழை நேரம் என்பதால் சாலைகளை சீரமைத்து, தண்ணீர் தேங்காதபடி முன்னேற்பாடுகளை செய்து வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு பகுதியிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

      தொடர்ந்து பதில் அளித்து சேர்மன் வள்ளி முருகன் பேசுகையில், சுரண்டை செண்பக கால்வாயை சீரமைத்து மேம்படுத்துவது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.சாலைகள் சீரமைக்கும் பணி மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நகராட்சி முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறது என்றார். 

      • பயிற்சியாளர் ராஜகோபாலின் பணி சிறக்க போட்டி தேர்வர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
      • நிகழ்ச்சியில் நூலகர்கள், தேர்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      மாவட்டமைய நூலகமாக தரம் உயர்ந்துள்ள தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக ஆங்கில புலமை மற்றும் பொது அறிவு வகுப்புகளை போட்டி தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக நடத்தி வரும் பணி நிறைவு செய்த இ.எஸ்.ஐ. மேலாளர் ராஜகோபால் 203 - வது வகுப்பினை நிறைவு செய்தார். பொது நல எண்ணத்துடன் பட்டதாரிகள் போட்டித்தேர்வை எதிர் கொள்ளும் வகையில் தயார்படுத்தி வரும் பயிற்சியாளர் பணி சிறக்க பொது நூலகத்துறை மற்றும் போட்டி தேர்வர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

      நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன், நூலகர்கள் பிரம நாயகம், சுந்தர், பாலசுப்பிர மணியன், நூலக பணியாளர்கள், கூட்டுறவு சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவர் கருப்பசாமி, தென்காசி மாவட்ட நூலக அலுவலக இளநிலை உதவியாளர் வினோத் மற்றும் போட்டித்தேர்விற்கு பயின்று வரும் தேர்வர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சியாளரை பாராட்டினர்.

      • குற்றாலத்தில் குடோனில் வைத்து இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
      • ஆய்வின்போது கெட்டுப்போன, செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

      தென்காசி:

      தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் இனிப்புகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் தென்காசி அருகே பிரானூர் பார்டர் மற்றும் குற்றாலத்தில் குடோனில் வைத்து இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

      அப்போது அங்கு கெட்டுப்போன மற்றும் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட இனிப்புகள் 26 கிலோ, சவ்வரிசி 25 கிலோ, கெட்டுப்போன உளுந்து 3 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 250 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு வைத்தே கிருமி நாசினி ஊற்றி அழிக்கப்பட்டது. மீண்டும் பயன்படுத்திய 15 லிட்டர் சமையல் எண்ணையும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

      • சீவலப்பேரி குளம் உள்ளிட்ட இடங்களில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
      • கட்டளை குடியிருப்பு-பூலாங்குடியிருப்பு சாலையை சீரமைக்கும் பணிகள் குறித்து குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் குழுவின் தலைவரும், அரசு கொறடாவுமான கோவி செழியன் தலைமையில் நடந்தது.

      சட்டமன்ற உறுப்பி னர்கள், கடலூர் அய்யப்பன், சூலூர் கந்தசாமி, சேந்தமங்கலம் பொன்னுசாமி, விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், வாசு தேவநல்லூர் சதன்திரு மலைக்குமார், தென்காசி பழனிநாடார் மற்றும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      தொடர்ந்து சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர், கோரிக்கை மனுக்கள் குறித்து கட்டளை குடியிருப்பு, பூலாங்குடியிருப்பு சாலை, இலத்தூர், நயினாரகரம் அப்துல்கலாம் தெரு, சங்குபுரம் பகுதி, சாம்பவர் வடகரை பேரூராட்சி வித்தன்கோட்டை கிராமம், தென்காசி நகரத்தின் மையப்பகுதியிலுள்ள சீவலப்பேரி குளம் உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

      மேலும், செங்கோட்டை என்.எச். சாலையில் இருந்து கட்டளை குடியிருப்பு-பூலாங்குடியிருப்பு சாலையை சீரமைக்கும் பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர்.

      அப்போது செங்கோட்டை நகராட்சி மூலம் சாலை அமைப்ப தற்கான நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என குழுவினர் தெரிவித்தனர்.

      கூட்டத்தில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஷேக், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அழகர்சாமி, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரேமலதா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் , துணைத் தலைவர் சுப்பையா, சாம்பவர்வடகரை பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

      ×