என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குற்றாலத்தில் கெட்டுப்போன இனிப்புகள் அழிப்பு
ByTNLGanesh11 Nov 2023 2:05 PM IST
- குற்றாலத்தில் குடோனில் வைத்து இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
- ஆய்வின்போது கெட்டுப்போன, செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி:
தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் இனிப்புகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் தென்காசி அருகே பிரானூர் பார்டர் மற்றும் குற்றாலத்தில் குடோனில் வைத்து இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு கெட்டுப்போன மற்றும் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட இனிப்புகள் 26 கிலோ, சவ்வரிசி 25 கிலோ, கெட்டுப்போன உளுந்து 3 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 250 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு வைத்தே கிருமி நாசினி ஊற்றி அழிக்கப்பட்டது. மீண்டும் பயன்படுத்திய 15 லிட்டர் சமையல் எண்ணையும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
Next Story
×