search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.
    • அதிலும் எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.

    திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது.

    திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.

    அதிலும் எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.

    ஞாயிறுக்கிழமை - எலுமிச்சை சாதம்

    திங்கட்கிழமை - தேங்காய் சாதம்

    செவ்வாய், புதன்கிழமை - தக்காளி, கீரை சாதம்

    வியாழன், வெள்ளிக்கிழமை - பொங்கல் சாதம்

    சனிக்கிழமை - புளியோதரை

    • இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.
    • பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும்.

    இவர்களில் மகேஸ்வரர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன.

    இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது.

    இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள்.

    பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும்.

    பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது.

    ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையாக மதித்தனர் நம் முன்னோர்கள்.

    ஆகவே முத்தொழில் முதல்வனான சிவனுடைய தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்டனர்.

    இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.

    பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது.

    சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம்.

    சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.

    சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

    இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்அதிர முழக்கமிடுவார்கள்.

    • விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.
    • சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற நவம்பர் 2-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது.

    முருகப்பெருமானின் முதலாம் பட வீடான திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற நவம்பர் 2-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலையில் அனுக்கை பூஜை தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். சண்முகர் தினமும் வெள்ளை அலங்காரம், பச்சை அலங்காரம், மயில் மீது அமர்ந்த அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களின் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதே போல தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் தந்ததொட்டி விடையாத்தி சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகின்ற நவம்பர் 6-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியாக 7-ந்தேதி சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹாரமும், 8-ந்தேதி காலை தேரோட்டமும் மாலையில் சுவாமிக்கு பாவாடை தரிசனம் மற்றும் மூலவர் தங்க கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் அளிப்பார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யப்பிரியா, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், பொம்மத்தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருதிராஷ்டிரரும்.... முற்பிறவியும்
    • தெய்வத்தின் முன்பு ஒரு போதும் நீதி தவறாது.

    திருதிராஷ்டிரரும்.... முற்பிறவியும்!

    கரவர்களின் தந்தையான திருதிராஷ்டிரர், பெரும் சோகத்துடன் அரசவையில் அமர்ந்திருந்தார். குருச்சேத்திரப் போர் முடிந்து. அவரது 100 பிள்ளைகள் மரணத்தை தழுவி இருந்தனர்.

    போருக்குப் பின் ஒருநாள் கிருஷ்ணரை சந்தித்த திருதிராஷ்டிரர், "கிருஷ்ணா.. நான் குருடனாக இருந்தாலும், நீதிமானான விதுரரின் சொல்லைக் கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.

    அப்படி இருந்தும் இப்போது என் பிள்ளைகள் 100 பேரை இழந்து தவிப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டார்.

    அதற்கு கிருஷ்ணர், "திருதிராஷ்டிரரே.. உங்களுக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதன் முடிவில் ஒரு கேள்வியும் கேட்பேன். அதற்கு நீங்கள் சரியான பதிலை சொல்லும் பட்சத்தில், உங்களின் கேள்விக்கும் பதில் கிடைக்கும்" என்று சொல்லி விட்டு, அந்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.

    ஒரு ராஜ்ஜியத்தை நீதி தவறாமல் ஆட்சி செய்தான் ஒரு மன்னன். அவனிடம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவன், சமையல்காரனாக பணிக்கு சேர்ந்தான். மிகவும் சுவையாக சமைப்பது, மன்னரை சிறப்பான முறையில் கவனிப்பது என்று அவன் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக அவன் வெகு விரைவிலேயே தலைமை சமையல் கலைஞனாக தரம் உயர்த்தப்பட்டான்.

    அதன்பின்னர் மன்னனுக்கு வித்தியாசமான சுவையில் உணவு செய்து கொடுத்து பரிசு பெறுவது ஒன்றே அந்த சமையல் கலைஞனின் நோக்கமாக இருந்தது.

    அதன்படி அரண்மனை குளத்தில் நீந்திக் கொண்டிருந்த அன்னப் பறவையின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து மன்னனுக்கு பரிமாறினான். தான் சாப்பிடுவது எந்த வகையான உணவு என்று தெரியாமல் அந்த சுவையில் மன்னன் மயங்கினான்.

    அதை மிகவும் விரும்பிய மன்னன், அடிக்கடி அந்த உணவை சமைக்குமாறும், தலைமைச் சமையல் கலைஞனுக்கு உத்தரவிட்டான். அந்த சுவையின் காரணமாக சமையல் கலைஞனும் பெரும் பரிசுகளைப் பெற்றான்.

    கதையை இத்துடன் முடித்துக் கொண்ட கிருஷ்ணர், "இப்போது சொல்லுங்கள் திருதிராஷ்டிரரே.. மன்னன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்?" என்று கேட்டார்.

    ஒரு முறை வசிஷ்ட மகரிஷியின் சமையல்காரனும், புலால் கலந்த உணவை வசிஷ்டருக்கு வைத்து விட்டான். ஆனால் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து அவனுக்கு சாபமிட்டார். அந்த விவேகமும், எச்சரிக்கை உணர்வும் இந்த மன்னனிடம் இல்லையே.

    சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் புலால் உண்டும், அதை கண்டுபிடிக்காத மன்னன்தான் அதிகம் தவறிழைத்தவன் ஆகிறான்" என்று பதிலளித்தார், திருதிராஷ்டிரன்.

    புன்னகைத்த கிருஷ்ணர், "திருதராஷ்டிரரே.. ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது 'மன்னன் செய்ததே தவறு எனக் கூறினீர்கள்.

    அத்தகைய நீதி தவறாமைதான், பீஷ்மர். துரோணர் போன்ற சான்றோர் சபையில் உங்களை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு பிள்ளைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.


    ஆனால், நான் சொன்ன கதையே தங்களைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீங்கள் தான் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாக சாப்பிட்டிருக்கிறீர்கள்.

    அந்த அன்னக் குஞ்சுகளும், அதன் தாய் பறவையும் எத்தகைய வேதனையை அடைந்திருக்கும் என்பதை தங்களின் நூறு பிள்ளைகளை இழந்து இப்போது அறிந்துகொண்டீர்கள்.

    முற்பிறவியில் தினம் தினம் பார்த்தும், சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. பிறகு எதற்கு கண்? அதனாலேயே குருடனானாய் பிறந்தீர்கள், தெய்வத்தின் முன்பு ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்" என்று முடித்தார்.

    • தீபவழிபாட்டிற்கு, வலம்புரிச் சங்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
    • சங்கில் ஏற்றும் தீபம் மகாலட்சுமி தாயாரை வீட்டிற்கு வரவழைக்கும்.

    சங்கு தீபவழிபாட்டிற்கு, வலம்புரிச் சங்கு சிறந்ததாக கருதப்படுகிறது. அதே நேரம் இடம்புரி சங்கை வைத்தும் சங்கு தீபத்தை ஏற்றலாம். இந்த சங்கில் ஏற்றும் தீபம் தான் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்கு வரவழைக்கும்.

    கேரளாவில் உள்ள பல நாராயணர் கோவில்களில், சங்கில் தீபம் ஏற்றும் வழக்கம் காணப்படுகிறது. சங்கில் தீபம் ஏற்றுவது மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அருளை ஒருசேரப் பெற்றுத்தருகிறது.


    தரமான நல்ல சங்கை வாங்கிய பிறகு, நம் வீட்டிற்கு கொண்டு வந்து தண்ணீர் ஊற்றி சங்கை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சங்கிற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, ஒரு பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி அதன் மேல் சங்கை வைக்க வேண்டும்.

    மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றுபவர்கள், சங்கினுள் பசுநெய்விட்டு தீபம் ஏற்ற வேண்டும். நாராயணனுக்கு விளக்கு ஏற்றுபவர்கள், சங்கினுள் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். உருக்கிய பசுநெய்யும். நல்லெண்ணெயும் சரி பாதியாகக் கலந்து சங்கில் விட்டு தீபம் ஏற்றினால், லட்சுமிக்கும் நாராயணனுக் கும் பூஜை செய்த பலன் கிடைக்கும்.


    இந்த சங்கு தீபத்தை நம் வீட்டின் தெய்வ ஆற்றல் மிகுந்த ஈசானிய மூலையில் வைத்து ஏற்ற வேண்டும். தீபம் எரியும் திசை தென்மேற்கு நோக்கியவாறு இருக்க வேண்டும். சங்கு தீபத்தை முதன் முதலாக ஏற்றும்போது, அந்த நாள் சுக்ர ஓரையில் ஏற்றுவது விசேஷமான பலனைத் தரும் என்கிறார்கள்.

    குறைந்தது அரை மணிநேரம் சங்கு தீபம் எரிவது சிறப்பு. சங்கு தீபம் ஏற்ற தொடங்கிய நாளில் இருந்து 41 நாட்களுக்கு தொடர்ந்து ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் அவசியம். பெண்கள் மாதவிலக்கு நாளில் வீட்டில் உள்ள வேறு ஒருவர் அந்த தீபத்தை ஏற்றலாம்.

    இவ்வாறு தொடர்ந்து 41 நாட்கள் சங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால், பொருளாதார பிரச்சனைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். இடர்பாடுகள் அனைத்தும் அகலும், வீட்டில் ஐஸ்வரியம் குடிகொள்ளும்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-30 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 7.55 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 7.13 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    நடராஜர் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் துளசி பிருந்தாவனம். சிதம்பரம் ஸ்ரீ சிவகாசி அம்மன் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமானுக்கு கனக சபையில் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராமர் சிறப்பு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், அன்னை ஸ்ரீகாந்தி மதியம்மன் அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் அபிஷேகம். திருவல்லிக் கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-லாபம்

    கன்னி-முயற்சி

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-உற்சாகம்

    தனுசு- இன்பம்

    மகரம்-நிம்மதி

    கும்பம்-புகழ்

    மீனம்-சுகம்

    • கிரிவலம் செல்ல நினைத்து ஒர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
    • இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும்.

    நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை.

    காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள்.

    அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது.

    அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

    கிரிவலம் செல்ல நினைத்து ஒர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.

    இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும்.

    திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும்.

    மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலைமுறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

    கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது.

    இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

    மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன.

    இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவண்ணாமலையில் நாம் எந்த கிழமை கிரிவலம் செல்கிறோமோ, அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.
    • அந்த வகையில் திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    திருவண்ணாமலையில் நாம் எந்த கிழமை கிரிவலம் செல்கிறோமோ, அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.

    அந்த வகையில் திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    இது தொடர்பாக கூறப்படும் புராண நிகழ்ச்சி வருமாறு:

    ஒரு காலத்தில் அசுரர்கள் தங்களுக்கு நிறைய செல்வங்களை வழங்க வேண்டும் என்று லட்சுமியை வற்புறுத்தினார்களாம்.

    ஆனால் திருமகள் அவர்களின் பேராசைக்கு இணங்காமல் அவர்களிடமிருந்து தப்பித்து திருவண்ணாமலைக்கு வந்தாள்.

    அங்கு தைல எண்ணையில் தீபமாய் உறைந்து தீபமாக கிரிவலம் வந்தாள்.

    அன்றைய தினம் ஒரு வெள்ளிக்கிழமை ஆகும்.

    அதனால் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் இல்லறப் பெண்களுக்கு லட்சுமி கடாட்சமும், இல்லற இன்பமும், அமைதியும், மாங்கல்ய பலமும் நிச்சயமாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

    எதிரிகளால் ஏற்படுகின்ற பில்லி, சூனியம், ஏவல் முதலான துன்பங்களை அகற்றி மனகோளாறுகளை நீக்க வல்லது இந்த வெள்ளிக்கிழமை கிரிவலமாகும்.

    எனவே வெள்ளிக்கிழமை கிரிவலத்தை தவற விடாதீர்கள்.

    • இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சன சன்னதியாகும்.
    • இங்கு ஒரு கல்யாண மண்டபம் கல்யாணம் நடத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரகாரத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் இங்கிருக்கும் கம்பாட்டு இளையநார் சன்னதி.

    இந்த சிறப்பான சன்னதியை மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டினார்.

    இங்கே நான்கு அறைகள் உள்ளன. பிரார்த்தனை செய்வதற்காக மூன்றாவது அறை பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    நான்காவது அறையில் முருக கடவுளின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.

    முதலாவது அறையில் பல அரிய வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழியாகத்தான் இரண்டாவது அறைக்கு செல்ல முடியும்.

    மேலும் சிவாகங்கா, விநாயகர் சன்னதி, கம்பாட்டு இளையநார் சன்னதிக்கு பின்புறமும் ஆயிரம்கால் மண்டபம் முன்புறமும் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள விமானம் மிகவும் சிறப்பாக பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அருணகிரிநாதர் நின்றபடி முருக பெருமானை பிராத்தனை செய்கிறார். இந்த சன்னிதி கோபுரதில்லையனர் சன்னதி என்று அழைக்கப்படுகிறது.

    இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சன சன்னதியாகும்.

    இச்சன்னதி தெற்குபுரத்திலிருந்து பல்லால மகாராஜா கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது.

    இங்கு ஒரு கல்யாண மண்டபம் கல்யாணம் நடத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சன்னதியில் லிங்கம், நந்தி, மற்றும் தேவியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    பல்லாலா மகாராஜா கோபுரம் மன்னர் பல்லாலாவால் கட்டப்பட்டது.

    அதனால்தான் பல்லாலா மன்னர் இறந்த பின்னர் சிவனடியாரே இறுதி சடங்குகள் செய்தார் என புராணம் கூறுகிறது.

    இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அருணாச்சலேஸ்வரரே பல்லாலாவின் மகனாக உருவெடுத்து கடமைகளை செய்தார்.

    கோவிலின் நாலாவது பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது.

    பல்லாலா கோபுரத்தின் கிழக்குப்புறத்தில் மன்னர் பல்லாலாவின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    மூன்றாவது பிரகாரத்தில் 12ம் நூற்றாண்டு காலத்து லிங்கம், சிலைகள், நிறுவப்பட்டுள்ளது.

    இத்துடன் கோபுர நுழைவாயிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு புறத்தில் கொடிகம்பமும் வடக்கு புறத்தில் உண்ணாமலை அம்மன் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

    இரண்டாவது பிரகாரத்தில் சிவலிங்கத்தை பிரதிபலிக்கும் அனைத்து உருவங்களும் மற்ற தெய்வங்களும் இருக்கிறது.

    இந்த பிரகாரம் தான் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.

    • ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சேவிக்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள்.
    • இந்த மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது.

    ஐந்தாவது பிரகாரத்தில் நான்கு திசைகளில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அவை வருமாறு:

    திருமஞ்சன கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், பேய் கோபுரம், மற்றும் ராஜா கோபுரம்.

    ராஜகோபுரம் 217 அடி உயரம் மற்றும் 11 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாகும்.

    விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியுடன் கட்டப்பட்ட இக்கோபுரம் தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகும்.

    இத்துடன் ஐந்தாவது பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் அத்துடன் சேர்ந்த சிவகங்கா தெப்பகுளம் இவை யாவும் மன்னர் கிருஷ்ணதேவராயர் புகழ்பாடும்.

    குறிப்பாக இங்கு இருக்கும் ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் சிறந்த கைவினைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இம்மண்டபம் திருவாதிரை நட்சத்திரம் தோன்றும் நாள் அன்று திருமஞ்சனம் நடைபெறுவதற்காக உபயோகிக்கப்படுகிறது.

    ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சேவிக்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள்.

    இந்த மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது.

    இங்கு சிவா லிங்கம் உள்ளது. பாதாளலிங்கம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் ஸ்ரீ ரமண மகரிஷி தியானத்தில் அமர்ந்திருந்தார்.

    • திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது.
    • இந்த கட்டமைப்பானது உலகளவில் போற்றும்படி அமைந்துள்ளது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது.

    இந்த கட்டமைப்பானது உலகளவில் போற்றும்படி அமைந்துள்ளது.

    கடந்த 1000 ஆண்டு காலமாக நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் இக்கோவிலை மிக சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியுள்ளது.

    இந்த கோவிலை பற்றி தமிழ் இலக்கணத்தில் முன்னணி கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ள காவியங்கள் இன்றும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது.

    மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பற்றி ஒரு தமிழ் மகாகவியான அருணகிரிநாதர் அவருடைய படைப்பில் சிறப்பாக எழுதியுள்ளார்.

    'திருப்புகழ்' என்ற மகா கவிதை இங்கு தான் எழுதி அற்பணிக்கப்பட்டது.

    மற்றொரு தமிழ் கவிஞர் மகாகவி முத்துசாமி தீட்சிதர் இங்குதான் அவருடைய படைப்பான கீர்த்தி அருணாச்சலம் என்ற கவிதையை எழுதி வெளியிட்டார்.

    இக்கோவிலில் இன்றைய காலகட்டத்தில் மொத்தமாக ஐந்து பிரகாரங்கள் உள்ளன

    இந்த ஐந்து பிரகாரங்களிலுமே நந்திகள் அருணாச்சலரை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

    • சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள இந்த லிங்கத்தை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் கிடைக்கும்.
    • கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்.

    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன.

    இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது.

    இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

    இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஒவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது.

    அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது.

    இந்த எட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது.

    இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

    கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.

    சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள இந்த லிங்கத்தை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் கிடைக்கும்.

    கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்.

    இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது.

    இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும்.

    அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது.

    இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள்.

    கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கமாகும். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம்.

    இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது.

    இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் என நம்பபடுகிறது.

    கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம்.

    இதன் திசை தென்கிழக்காகும்.

    இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது.

    இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

    கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம்.

    இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான்.

    இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது.

    சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.

    கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம்.

    இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும்.

    இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

    கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம்.

    வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.

    செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

    கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிருவப்பட்டது.

    புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது.

    இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.

    ×