என் மலர்
ஆன்மிகம்
- இதுவரை சபரிமலைக்கு 30 லட்சத்து 87 ஆயிரத்து 49 பக்தர்கள் வந்துள்ளனர்.
- மண்டல பூஜை நாளை (26-ந்தேதி) மதியம் 12 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இநத ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலை அணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
நேற்று முன்தினம் (23-ந்தேதி) வரை சபரிமலைக்கு 30 லட்சத்து 87 ஆயிரத்து 49 பக்தர்கள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 4.46 லட்சம் அதிகமாகும்.
இந்தநிலையில் மண்டல பூஜை நாளை (26-ந்தேதி) மதியம் 12 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சாமி தரிசனம் செய்ய மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) முறைப்படி இன்று 50 ஆயிரம் பக்தர்களுக்கும், நாளை 60 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர்.
மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இதற்காக ஐயப்பனுக்கு அணி விக்கப்படும். தங்க அங்கி ஊர்வலம் கடந்த 22-ந்தேதி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது.
அந்த ஊர்வலம் இன்று பிற்பகலில் பம்பையை வந்தடைகிறது. அதனை கேரள மாநில தேவசம்போர்டு மந்திரி வாசவன் வரவேற்கிறார். அதன்பிறகு தங்க அங்கி ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணி அளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.
மாலை 6.15 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. ஐயப்பன் தங்க அங்கியில் நாளை வரை பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். பின்பு மண்டல பூஜை முடிந்து நாளை இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
தங்க அங்கி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற கட்டுப்பாடுகள் அணிவிக்கப்பட்டுள்ளன. ஊர்வலம் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் போது பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
தங்க அங்கி ஊர்வலம் மாலை 5 மணிக்கு சரங்குத்தியை அடைந்ததும், பம்பையில் இருந்து மலையேறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜை முடிந்து நாளை இரவு 11 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்பு மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை நடைபெறும் தினத்திலும் பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப்பட உள்ளன.
ஜனவரி 13-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களும், 14-ந்தேதி 40 ஆயிரம் பக்தர்களும் மெய்நிகர் வரிசை முறையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- நோன்பின் பலன் கைவரப்பெற்று சொர்க்கத்தை அடைகின்ற பெண்ணே!
- சொற்களால் சொல்ல முடியாத தன்மையுடையது இறைவனின் மலர் பாதங்கள்.
திருப்பாவை
பாடல்:
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்;
பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான்
தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கமலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
நோன்பின் பலன் கைவரப்பெற்று அதன் விளைவாக சொர்க்கத்தை அடைகின்ற பெண்ணே! கதவைத்தான் திறக்கவில்லை; மறுமொழியேனும் சொல்லக் கூடாதா? நறுமணம் நிறைந்த துளசி மாலையை அணிந்த நாராயணன் நமது போற்றுதலை ஏற்று அருள் தரக் காத்திருக்கிறான். முன்னொரு காலத்தில் எமனால் வீழ்த்தப்பட்டு மரணம் எய்திய கும்பகர்ணன், உனக்கு தன்னுடைய உறக்கத்தை தந்து விட்டானா? சோர்வும், சோம்பலும் கொண்டவளே! அருமைப் பெண்ணே! தெளிவுடன் எழுந்து வந்து கதவைத்திற!
திருவெம்பாவை
பாடல்:
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண் டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாபிள்ளைகாள்
ஏதவன் ஊர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
பாதாள உலகங்கள் ஏழினையும் தாண்டி, சொற்களால் சொல்ல முடியாத தன்மையுடையது இறைவனின் மலர் பாதங்கள். கொன்றைப் பூவைச் சூடிய அவனே, வேதங்கள் கூறும் எல்லா பொருட்களுக்கும் முடிவானவன். அவன் ஒரு பகுதியாக அன்னை இருக்கிறாள். அனைத்திலும் நிறைந்த அவனை வேதங்களும், தேவர்களும், மானிடர்களும் போற்றினாலும், அப்போற்றுதலுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். தொண்டர்களின் உள்ளங்களில் குடியிருக்கும் அந்த சிவபெருமான் கோவில் உள்ள ஊரில் பிறந்த பெண் பிள்ளைகளே? அவன் ஊர் எது? அவனது உறவுக்காரர்கள் யார்? அயலார்கள் யார்? அவனைப் பாடும் முறை எது? என்று எனக்கு கூறுவீர்களாக.
- மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
- ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-10 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி நள்ளிரவு 11.02 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: சித்திரை மாலை 4.22 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ சிவபெருமானுக்கு, வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் காலையில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-பக்தி
மிதுனம்-தனம்
கடகம்-நலம்
சிம்மம்-உயர்வு
கன்னி-ஆதரவு
துலாம்- பாசம்
விருச்சிகம்-பண்பு
தனுசு- பரிவு
மகரம்-மேன்மை
கும்பம்-உயர்வு
மீனம்-கனிவு
- ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.
- ஆனால் பிரதோஷ நாளில் அப்படி வலம் வருதல் கூடாது.
ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.
ஆனால் பிரதோஷ நாளில் அப்படி வலம் வருதல் கூடாது.
பிரதோஷ நாளில் "சோமசூக்த பிரதட்சன" முறையை கையாள வேண்டும்.
சோமசூத்த பிரதட்சணம் என்றால் என்ன?
ஆலால விசமானது தேவர்களை துரத்தியது. தேவர்கள் ஈசனை வலமாக ஓடி வந்தனர்.
ஆலால விசம் இடமாக வந்து எதிர்த்தது. விசம் எதிர்ப்பதை கண்டு தேவர்கள் அப்படியே திரும்பி இடமாக வந்தனர்.
ஆலாலம் வலமாக வந்து எதிர்த்தது.
ஆக ஆலாலம் முன்னும், பின்னும் தேவர்களை எதிர்த்ததால் பிதோஷ நாளன்று ஈஸ்வரனை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் தரிசனம் செய்ய வேண்டும்.
இந்த முறையே "சோம சூக்த பிரதட்சணம்".
- கடவுளுக்காக ஒரு நிமிடம் செலவழித்து வாழ்ந்தால் என்றென்றும் இன்பங்கள் அடையலாம்.
- உங்கள் அன்றாட பூஜையை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களை நல்ல வழியில் கூட்டி செல்லுங்கள்.
ஆராதனை என்று சொல்லும் போது அது கற்பூர தீப ஆரத்தியையே குறிக்கிறது.
கற்பூர தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி கற்பூர தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும்.
பின்னர் சிறிது பூவினை எடுத்து நீரில் நனைத்து கற்பூர தீபத்தினை 3 முறை சுற்றி ஏதோ எனக்கு தெரிந்த முறையில் முடிந்த அளவில் பூஜை செய்தேன்.
எனது பூஜையில் இருக்கும் குற்றம் குறைகளை மன்னித்து எனது பூஜையை ஏற்றுக் கொள்ளுங்கள் என மனதார வேண்டிக்கொண்டு பாதத்தில் சமர்பிக்க வேண்டும்.
ஓரிரு நிமிடங்கள் கண்ணை மூடி நாம் வணங்கிய தெய்வத்தின் உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
கற்பூர தீப ஆராத்தியினை தொட்டுக் கும்பிட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளவும்.
நம் வீட்டில் பூ, சூடம் இல்லை. தீர்ந்து விட்டது என்றால் அதற்காக கவலைப்பட தேவையில்லை. நம்மிடம் எது இருக்கிறதோ அதைக் கொண்டு பூஜை செய்தாலே இறைவன் ஏற்றுக் கொள்வார்.
ஒரு விளக்கை ஏற்றி, பால், பழம், கல்கண்டு, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை இதில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக வைத்து தீபம் காட்டி, மணி அடித்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்.
உங்கள் வாழ்வில் வளம் உண்டாகும்.
கடவுளுக்காக ஒரு நிமிடம் செலவழித்து வாழ்ந்தால் என்றென்றும் இன்பங்கள் அடையலாம்.
உங்கள் அன்றாட பூஜையை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களை நல்ல வழியில் கூட்டி செல்லுங்கள்.
தூபம்
தூய சாம்பிராணி தூபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி வாசனை தூபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும்.
தூய சாம்பிராணி கிடைக்காதவர்கள் நல்ல வாசனையுள்ள பத்தி காட்டலாம்.
தீபம்
நெய் தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ள வேண்டும்.
- உருவச் சிலை, படம் இல்லாதவர்கள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி தூய பாத்திரத்தில் சேர்க்கலாம்.
- பதினாறு பெயர் தெரியாதவர்கள் தாங்கள் எந்த பெயரை சொல்லி தெய்வத்தை வணங்குகிறார்களோ அதே பெயரை 16 தடவை கூறி பூ சேர்க்கலாம்.
அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.
உருவச் சிலை, படம் இல்லாதவர்கள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி தூய பாத்திரத்தில் சேர்க்கலாம்.
பதினாறு பெயர் தெரியாதவர்கள் தாங்கள் எந்த பெயரை சொல்லி தெய்வத்தை வணங்குகிறார்களோ அதே பெயரை மீண்டும் மீண்டும் 16 தடவை கூறி பூ சேர்க்கலாம்.
முடிந்தவர்கள் 108 தடவை பூ சமர்பிக்கவும்.
இறுதியில் தங்களை வணங்கி பூ சேர்க்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
பூ கிடைக்காதவர்கள் மந்திரம் மட்டும் சொல்லி வணங்கலாம். மந்திரம் என்றதும் ஏதோ மிகப் பெரிய விஷயமாக எண்ண வேண்டாம்.
ஓம் அதனைத் தொடர்ந்து தெய்வத்தின் பெயர் இறுதியில் போற்றி. இது எளிமையான மந்திரமாகும்.
உதாரணமாக வினாயகருக்கு என்றால் ஓம் வினாயகப் பெருமானே போற்றி போதுமானது.
முருகனுக்கு என்றால் ஓம் முருகப் பெருமானே போற்றி ஆகும்.
இரண்டொரு துளி தண்ணீரினை (பச்சை கற்பூரம், கிராம்பு பொடி கலந்த தூய பன்னீர் சிறப்பானது) நாம் பூஜை செய்யப் போகும் தெய்வத்தின் உருவ சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.
உருவச் சிலை, படம் இல்லாதவர்கள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி நீரினை தூய பாத்திரத்தில் சேர்க்கலாம்.
நைவேத்தியம்
உலர்திராட்சை அல்லது டயமண்ட் கல்கண்டு வைத்து முதலில் நீரினால் 3 முறை சுற்றி அந்த நீரை வலது புறம் விட்டு விட்டு ஒரு இரண்டு பூக்களை எடுத்து நீரில் பூவினை நனைத்து நைவேத்தியத்தை 3 முறை சுற்றி தெய்வத்திற்கு ஊட்டி விடுவது போல் பாவனை செய்தபடி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். பூ இல்லாதவர்கள் நீரினை கொண்டு செய்யலாம்.
- ஆனால் நேரமின்மை காரணமாக பூஜைகள் செய்ய முடிவதில்லை.
- மிக குறுகிய நேரத்தில் கீழ்க்கண்ட முறையில் சிறப்பாக பூஜை செய்ய முடியும்.
தினசரி பூஜை செய்ய வேண்டும் எனப் பலருக்கு ஆசையிருக்கும்.
ஆனால் நேரமின்மை காரணமாக பூஜைகள் செய்ய முடிவதில்லை.
மிக குறுகிய நேரத்தில் கீழ்க்கண்ட முறையில் சிறப்பாக பூஜை செய்ய முடியும்.
1. அபிஷேகம்.
2. மந்திர புஸ்பம்.
3. தூபம்.
4. தீபம்.
5. நைவேத்தியம்.
6. ஆராதனை.
- சிவன்- அபிஷேகப் பிரியர்
- விஷ்ணு- அலங்காரப் பிரியர்
அருள் சக்தி,
போர் சக்தி,
கோசக்தி,
புருஷசக்தி.
அருள்சக்தி- பார்வதி
போர்ச்சக்தி- காளி
கோ சக்தி- துர்க்கை
பிருஷ சக்தி- விஷ்ணு
தெய்வங்களுக்கு பிரியமானவை:
சிவன்- அபிஷேகப் பிரியர்
விஷ்ணு- அலங்காரப் பிரியர்
சூரிய பகவான்- நமஸ்காரப் பிரியர்
விநாயகர்- நைவேத்யப் பிரியர்.