search icon
என் மலர்tooltip icon

    அரியானா

    • அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார்.
    • வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் நேற்றைய தினம் நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார். அங்கு ஊர் மக்கள் திரண்டு வினேஷ் போகத்தின் வருகையை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மாலை மரியாதைகள், பரிசுப் பொருட்கள் என வழங்கி ஊர் மக்கள் வினேஷ் போகத்தை உச்சி முகர்ந்து வருகின்றனர். வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது.

    வினேஷ் போகத்தை கவுரவிக்கும் விதமாக ஊர் மக்கள் ஒன்றிணைத்து அவருக்கு தங்கப் பதக்கத்தையும் வழங்கினர். ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து காசு போட்டு வினேஷ் போகத்துக்கு பரிசுத்தொகை வழங்கியுள்ளனர்.

    தனது உறவினரும் குருவுமாக மகாவீர் சிங் கிடம் ஆசி பெற்ற அவர் கண்ணீர் விட்டு அழுதார். ஊர் மக்களின் அன்பு குறித்து வினேஷ் போகத் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாதது எனது வாழ்க்கையில் ஆறாத வடுவாக இருக்கும். இனியும் நான் மல்யுத்தத்தில் ஈடுபடுவேனா மாட்டேனா என்று தெரியவில்லை.

    எனக்கு இங்கு வந்தவுடன் கிடைத்த அன்பு எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த நபிக்கையை கொண்டு சரியான திசையில் பயணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் முன்னதாக வினேஷ் கூறியபடி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவாரா அல்லது மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேரா சாச்சா ஆசிரமத்தில் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியை குர்மீத் ராம் ரஹீம் கொண்டாட உள்ளார்
    • அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ளார் குர்மீத்

    அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது அரியானா சிறையில் இருந்து வரும் ராம் ரஹீமுக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தேரா சச்சா ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பரோல் கேட்டு குர்மீத் விண்ணப்பித்திருந்தார். அதன்படி 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு இன்று அதிகாலை 6.30 மணியளவில் குர்மீத் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேரா சச்சா ஆசிரமத்தில் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியை குர்மீத் ராம் ரஹீம் கொண்டாட உள்ளதாக தெரிகிறது. கடத்த கடந்த 2022 மற்றும் 23ஆம் ஆண்டுகளில் மொத்தமாக 232 நாள்கள் குர்மீத்துக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    2023ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், பிறகு ஜூலை, நவம்பர், மீண்டும் 2024ஆம் ஆண்டு ஜனவரி என முறையே 40 நாள்கள், 30 நாள்கள், 21 நாள்கள், 50 நாள்கள் பரோலில் குர்மீத் வெளியே வந்தார்

    அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ள குர்மீத் பரோலில் வெளிவரும் காலகட்டங்கள் சரியாக உள்ளுர் அல்லது மாநில தேர்தல் சமயங்களாகவே இருந்துள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சரியாக ராஜஸ்தான் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு 3 வார பரோலில் குர்மீத் வெளியே வந்தார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 40 நாள் பரோலில் குர்மீத் வெளிவந்த நேரம் சரியாக அரியானா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற காலகட்டம் ஆகும்.

    கடந்த 2022 பிப்ரவரியில் 21 நாள் பரோலில் அவர் வெளிவந்த காலகட்டம் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த சமயம்., அதே ஆண்டு ஜூன் மாதம் வெளியே வந்தது அரியானா உள்ளாட்சித் தேர்தல் சமயம். அதே அக்டோபரில் அரியானா இடைத்தேர்தலின்போது வந்தார். 

    2020 அக்டோபரில் அரியானா சட்டமன்ற தேர்தலின்போது வெளியே வந்தார். தற்போது காஷ்மீர், அரியானா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கும் சமயத்தில் வெளியே வந்துள்ளார். 

    • அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • அதில், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் இனி ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என்றது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தேசப்பற்று நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பள்ளிகளில் காலையில் குட் மார்னிங்கிற்கு பதில் ஜெய்ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போது, மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வைத் தூண்டும்.

    தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்களின் எதிர்காலப் பங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.

    அனைத்து அரசு ஊழியர்களும் சக ஊழியர்களுக்கு வணக்கம் என்று கூறுவதற்கு பதிலாக, ஜெய்ஹிந்த் என்று சொல்ல துவங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
    • இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்துள்ளது.

    சண்டிகர்:

    பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இதற்கிடையே, வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது. இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்து இருக்கிறது.\

     

    பாராளுமன்றத்தில் இன்றும் வினேஷ் போகத் விவகாரம் எதிரொலித்தது. வினேஷ் போகத் தகுத நீக்கம் விவகாரத்தில் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. இந்தப் பிரச்சனையை எழுப்ப அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இன்று அரியானாவில் ஒரு ராஜ்யசபா இருக்கை காலியாக உள்ளது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இருந்தால் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோம் என தெரிவித்துள்ளார்.

    • ரவி மவுன் இறந்ததாக மாஸ்கோவில் உள்ள இ ந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
    • உடலை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை.

    அரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மவுன். இவர்க கடந்த ஜனவரி 13ம் தேதி போக்குவரத்து வேலைக்காக ரஷியா சென்றார். அவர், பின்னர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

    22 வயதான இவர், உக்ரைனியப் படைகளுக்கு எதிராக போரிட ரஷிய ராணுவத்தால் முன் நிலைக்கு அனுப்பட்டார்.

    இந்நிலையில், உக்ரைன்- ரஷிய ராணுவப் போரில் ஈடுபட்டபோது ரவி மவுன் இறந்ததாக மாஸ்கோவில் உள்ள இ ந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    ரவி மவுனின் இருப்பிடம் குறித்து, அவரது சகோதரர் அஜய் மவுன் கடந்த ஜூலை 21ம் தேதி அன்று தூதரகரத்திற்கு கடிதம் எழுதினார். அப்போது, அவர் இறந்துவிட்டதாக தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அஜய் மவுன் கூறினார்.

    உடலை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையை அனுப்புமாறு தூதரகம் கேட்டுக் கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    அஜய் மவுன் தனது சகோதரரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவரது உடலைக் கொண்டு வர போதுமான பணம் எங்களிடம் இல்லை. ஒரு ஏக்கர் நிலத்தை விற்று ரூ.11.50 லட்சம் செலவழித்து அவரை ரஷியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

    ராணுவத்தில் இருந்து அனைத்து இந்தியர்களையும் விரைவில் வெளியேற்றுவதாக ரஷ்யா உறுதியளித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தடுக்க முயன்ற தந்தையை பூஷன் தாக்கிய நிலையில் அவர் படுகாயமடைந்தார்
    • சகோதர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்து வந்ததே இந்த கொலைகளுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

    அரியானாவில் தனது தாய் உட்பட குடுபத்தினர் 6 பேரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் நராய்கர் [Naraingarh] நகர் அருகே உள்ள ரத்தோர் கிராமத்தில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த கொலைகள் அரங்கேறியுள்ளது.

    வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது தாய், சகோதரன், சகோதரனின் மனைவி மற்றும் அவர்களின் 7 வயது மகன் , 6 வயது மகள் மற்றும் 6 மாத குழந்தை உட்பட 6 பேரை பூஷன் குமார் என்ற அந்த முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்து அவர்களை வீட்டில் வைத்தே எரிக்க முயற்சி செய்துள்ளார்.  தடுக்க முயன்ற தந்தையை பூஷன் தாக்கிய நிலையில் அவர் படுகாயமடைந்தார்.  எனவே தந்தை சத்தம் எழுப்பி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

    இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பூஷனை கைது செய்துள்ளனர் . சகோதர்கள் இருவருக்கும் இடையில் 2.25 ஏக்கர்குடும்ப நிலம் நிலத்தகராறு இருந்து வந்ததே இந்த கொலைகளுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. 

    • இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியாக களம் காண்கிறது.
    • பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையான நிலையில், அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அறிவித்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் சிங், பஞ்சாப் முதல் மந்திரி பகவத் மான் ஆகியோர் கூட்டாக இந்த முடிவை அறிவித்தனர்.

    பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையாக உள்ள நிலையில், அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.

    வரும் சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது. பாஜக மற்றும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    எனவே பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜேஜேபி என 4 முனை போட்டி இந்த தேர்தலில் உருவாகியுள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தின் பஞ்சகுலா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் இலவச மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்ற 5 வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • யமுனாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சட்டவிரோதமான சுரங்கப்பணிகள் தொடர்பான மோசடி வழக்கில் சுரேந்தர் சிக்கியுள்ளார்.
    • அரியானா முன்னாள் முதல்வர்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தீபேந்தர் சிங் ஹுடாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.

    அரியானா மாநிலத்தில் காங்கிரசை சேர்ந்த சோன்பத் தொகுதி எம்.எல்.ஏ சுரேந்தர் பன்வார், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானாவில் யமுனாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சட்டவிரோதமான சுரங்கப்பணிகள் தொடர்பான மோசடி வழக்கில் சுரேந்தர் சிக்கியுள்ளார்.

    இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சோன்பத்தில் உள்ள சுரேந்தர் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இந்நிலையில் அவர் தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மகனையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது. இவர் காங்கிரசைச் சேர்ந்த அரியானா முன்னாள் முதல்வர்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தீபேந்தர் சிங் ஹுடாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.

     

    முன்னதாக 2005 முதல் 2014 வரை தீபேந்தர் சிங் ஹுடா, அரியானா நகர மேம்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவர் திரிலோக் சந்த் குப்தா ஆகியோர் R.S. Infrastructure (RSIPL) உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து நகர்ப்புறங்களில் காலனி அமைப்பதாக கூறி சட்டவொரோதமாக நிலங்களை அபகரித்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.

    இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் அமலாக்கத்துறை, R.S. Infrastructure (RSIPL) ரியல் எஸ்டேட் பிரிவை நடத்தி வரும் M3M ப்ரோமோட்டர்ஸ் நிறுவனம் 10.35 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் காலனி அமைப்பதாக கூறி லைசன்ஸ் வாங்கியது. ஆனால் இதுவரை அங்கு எந்த காலனியும் அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அந்த நிலைத்தை Religare Group என்ற மற்றொரு நிறுவனத்துக்கு விற்றுவிட்டதாக M3M ப்ரோமொடேர்ஸ் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த பரிவதனையின் மூலம் சட்டவிரோதமாக பெறப்பட்ட ரூ.300 கோடி பணம் M3M ப்ரோமோட்டர்ஸ் நிறுவனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாங்கிக்கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.  இந்த நில மோசடி வழக்கில் முன்னாள் முதலவர் தீபேந்தர் சிங் ஹுடா  சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கருதுகிறது.

    நேற்று முன் தினம் மகேந்திரகர் காங்கிரஸ் எம்எல்ஏ ராவ் தன் சிங் தொடர்புடைய ரூ.1400 கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள்  தொடர்புடைய வழக்குகளில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்துவருவது கவனிக்கத்தக்கது. 

    • யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.
    • இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது

    அரியானாவில் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக தனித்துக் களம் காண்பதாக காங்கிரஸ் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இந்த முடிவை அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் சிங், பஞ்சாப் முதலவர் பகவத் மான் கூட்டாக இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

     

    பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையாக உள்ள நிலையில் அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களை கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.

    ஆனால் இடையிலேயே பாஜகாவுக்கான ஆதரவை ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா முறித்துக்கொண்டார். சில சுயேச்சைகளும் பாஜகவுடனான ஆதரவை விலகிக் கொண்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளதால் தற்போது ஸ்திரத்தன்மை இலலாமல் அரியானாவில் பாஜக ஆட்சி தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது. பாஜக ஆதரவை முறித்துக்கொண்ட துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் கடந்த தேர்தலைப் போல தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. எனவே பாஜக - காங்கிரஸ் - ஆம்ஆத்மி-ஜேஜேபி ஆகிய நான்கு கட்சிகளின்  முனை போட்டி  இந்த சட்டமன்றத் தேர்தலில் உருவாகியுள்ளது. 

    • 23 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 4 வருடம் ராணுவத்தில் பணிபுரிய முடியும்.
    • அதன்பின் 25 சதவீதம் பேர் 15 ஆண்டு பணிகள் நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

    சண்டிகர்:

    அக்னிபாத் திட்டம் 2022-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் 23 வயது வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 4 ஆண்டு பணிபுரிந்தபின் வெளியேறிவிடுவார்கள். அதன்பின் 15 ஆண்டுக்கு 25 சதவீதம் பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.

    இதற்கிடையே, அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதால் அவர்களுக்கு தியாகிகள் என்ற பெயர் கிடைக்காது எனக் கூறினர். ஆனால், மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசி வருகின்றனர்.

    ஒருவேளை பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அக்னிவீர்களுக்கு மாநில அரசால் தேர்வு செய்யப்படும் கான்ஸ்டபிள், சுரங்கக் காவலர், வனக் காவலர், ஜெயில் வார்டன் மற்றும் எஸ்பிஓ போன்ற பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் என அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு அக்டோபரில் அரியானா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில அரசின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    ஏற்கனவே, அக்னிபாத் திட்டத்தின்கீழ் பணிபுரிந்த முன்னாள் அக்னிவீர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையின் கான்ஸ்டபிள் வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    • 1950-ம் ஆண்டு ஓபிசி பிரிவனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது.
    • 1980-ல் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டார்.

    அரியானா மாநிலத்தில் இந்த வருடத்தின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி எப்போதுமே பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்கு எதிரானது எனக் கூறினார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    1950-ம் ஆண்டு ஓபிசி பிரிவனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் வழங்கிய பரிந்துரைகள் பல வருடங்களாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.

    1980-ல் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டார். 1990-ல் மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டபோது ராஜிவ் காந்தி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இரண்டரை மணி நேரம் பேசினார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியது. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் கர்நாடகாவில் நடந்தது போன்று நடந்திருந்திருக்கும்.

    அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதியாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

    வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட் அமைக்கும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • கஜேந்திர சிங் செகாவத் ஸ்கை டைவிங் செய்யும் வீடுயோ இணையத்தைக் கலக்கி வருகிறது.
    • நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் பாஜக வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றவர் கஜேந்திர சிங் செகாவத்.

    மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள பாஜக மூத்த தலைவர் கஜேந்திர சிங் செகாவத் ஸ்கை டைவிங் செய்யும் வீடுயோ இணையத்தைக் கலக்கி வருகிறது. இன்று [ஜூலை 13] உலக ஸ்கைடிவிங் தினம் [WORLD SKYDIVING DAY] கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதை ஊக்குவிக்கும் வகையில் 56 வயதான கஜேந்திர சிங் செகாவத் ஹரியானா மாநிலம் நார்நவுல் பகுதியில் நிபுணர் உதவியுடன் ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

    மிகவும் பயத்தை ஏற்படுத்தும் ஸ்கை டைவிங் ஸ்டன்டை மத்திய அமைச்சர் துணித்து செய்துள்ளதை நெட்டிஸின்கள் பாராட்டி வருகின்றனர். இந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் பாஜக வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றவர் கஜேந்திர சிங் செகாவத். பாஜகவின் கடந்த ஆட்சியில் [2019 முதல் 2024 வரை] ஜல் சக்தி அமைச்சராக கஜேந்திர சிங் செகாவத் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×